காஞ்சிபுரம் சிவன் கோயில்
முகவரி
காஞ்சிபுரம் சிவன் கோயில், காமராஜர் சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் – 600059.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
காஞ்சிபுரம், காமராஜர் சாலையில் டயர் கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் பின்பகுதியில் பழமையான கோவில் காணப்படுகிறது. சுற்றிலும் கட்டிடங்கள் மற்றும் கடைகள் இருந்ததால் இந்த கோவில் பற்றி யாருக்கும் தெரியவில்லை. கடைக்கு பின்னால் பல ஆண்டுகளாக மறைந்து இருந்த கோவில் தற்போது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்று ஏராளமானோர் பார்வையிட்டனர். அப்போது டயர் கடை நடத்தி வருபவர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என்று தெரிவித்து வந்தார்.
புராண முக்கியத்துவம்
காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் பல 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜீவசமாதி அடைந்துள்ள கோயில் ஒன்று உள்ளது. வருவாய்த்துறையினரின் ஏடுகளில் கல்மடம் என பதிவாகி இருக்கிறது. இக்கோயில் தொடர்பாக நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகள் நடந்துள்ளன. இக்கோயிலானது தனிப்பட்ட நபருக்குரியதா அல்லது லிங்காயச் சமுதாயத்தினருக்கு சொந்தமானதா என அவர்கள் தரும் ஆவணங்களைப் பார்த்து முடிவு செய்யப்படும். நீதிமன்ற உத்தரவுகளும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதையும் அறநிலையத்துறை சட்டப்பிரிவு ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து கண்காணிக்கும். தற்போது ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படும் இந்த இடத்தை அவர்களே வைத்துக் கொள்வதா அல்லது அவர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு கொடுத்தால் அதை அனைவரும் வந்து வழிபடும் படியாக சிறந்த கோயிலாக மாற்றுவதா என்பதை ஆவணங்களைப் பொறுத்தே முடிவு செய்யப்படும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தாம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை