கழனிவாசல் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
கழனிவாசல் சிவன்கோயில்,
கழனிவாசல், தரங்கம்பாடி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம்.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
மயிலாடுதுறையின் தெற்கில் செல்லும் திருவாரூர் சாலையில் இரண்டு கிமீ தொலைவில் மஞ்சளாறு ஓடுகிறது. அதன் தென் கரையில் ஆறு கிமீ பயணித்தால் முட்டம், கோடங்குடி வழியாக கழனிவாசல் அடையலாம். ஆற்றங்கரையில் செல்லும் சாலை ரொம்ப சுமாராகத்தான் இருக்கும், அதனால் மங்கைநல்லூர் வந்து அதன் கிழக்கில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ள பெரம்பூர் அதன் வடக்கில் உள்ள கடக்கம் வழி சென்றால் கழனிவாசல் நான்கு கிமீ தூரம். சிறிய ஊர் தான் இது. ஒரு பள்ளி இரு தெருக்கள் சில கடைகள் அதில் அரசு தொடக்கப்பள்ளி, அந்த பள்ளியின் வாயிலில் தான் இந்தகோயில் அமைந்துள்ளது. ஒரு பெரிய அரசமரத்தின் கீழ் கிழக்கு நோக்கிய சிவன்கோயில், தகர கொட்டகையில் நடுநாயகமாக நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கி ஒரு மேடையில் உள்ளார் இறைவன் எதிரில் சிறிய நந்தி உள்ளது கோயிலின் பின்புறம் ஒரு குளமும் உள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கழனிவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி