Tuesday Jan 28, 2025

கரைகண்டன் சிவன்கோயில்

முகவரி

கரைகண்டன் சிவன்கோயில், நாகை மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம்,

இறைவன்

இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி

அறிமுகம்

ஆடுதுறை-நச்சினார்குடி சாலையில் உள்ளது இவ்வூர். வைப்புதலமாக போற்றப்படுகிறது. திருவாடுதுறை ஆதீனத்தின் கோயிலாக உள்ளது. “கால்களால் பயனென் கரைக்கண்டன் உறை கோவில் கோலக் கோபுரக் கோகரணஞ் சூழாக் கால்களால்பயனென்” என திரு அங்கமாலையில் போற்ற்ப்பட்டிருப்பதை காணலாம். இறைவன் சிறிய திருமேனியாக ஒரு அடி உயர்ம கொண்டவராகவும், அம்பிகையும் சிறிய அளவினராக உள்ளார். கோயில் ஆதீனதினால் கவனிக்கபடாமல் பாழ்பட்டு கிடக்கிறது. குடமுழுக்கு செய்ய வருபவர்களையும் வரவேற்ப்பதில்லை, என்ன செய்ய பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை பற்றுக பற்று விடற்கு எனும் குறட்பாவினை தற்போதைய நிர்வாகிகள் படித்திருந்தால் இதுபோன்று பல கோயில்கள் அவர்களது கட்டுப்பாட்டில் வீணடிக்கப்பட்டிருக்காது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள இரயில் நிலையம்

ஆடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

0
Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top