கரும்பூர் சிவன் கோயில், கரும்பூர்
முகவரி
கரும்பூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பண்ருட்டி- புதுபேட்டை- ஒரையூர்- கரும்பூர் எனவரவேண்டும். இவ்வூரின் மையத்தில் பெரியதொரு ஆலமரமும்,குளமும் அதனருகில் ஒரு அய்யனார் கோயிலும் உள்ளது. இக் கோயிலின் பின் புறம் உள்ள தெருவில் சிவாலயம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்புடைய வளாகத்தில் ஆங்காங்கே லிங்கங்கள் சிதறி கிடக்க கோயில் சிதிலமடைந்து உள்ளது. மூலஸ்தான லிங்கம் , சிறு விநாயகர், சண்டேசர் மட்டும் காவலர் கருணைசெல்வம் முயற்சியில் போடப்பட்ட கொட்டகையில் இருந்தது.அதுவும் சிதைந்து விட இறைவன் சூரியனின் தகிப்பிலும் அமைதி காக்கிறார். இவருடன் பேசியபோது … பாண்டவர் இப்பகுதிக்கு வந்தபோது வீமன் நீர் எடுக்க தென்பெண்ணை ஆற்றிற்கு வந்தான். அப்போது காண்டாமிருக குட்டிகள் ஐந்து கொடிய விலங்கிடம் மாட்டிக்கொண்டன. அந்த மிருகத்தினை கொன்று குட்டிகளை காப்பற்றினான். அந்த நன்றி கடனாக வீமன் வலிமை தரும் உனது பாலை எனக்கு கொடு என்கிறான். தாய் காண்டாமிருகமோ தருகிறேன், அத்துடன் ஐந்து கற்களையும் தருகிறேன் ,அவை கீழே வைத்தவுடன் லிங்கமாகும். அந்த லிங்கங்களை ஐந்து இடங்களில் பிரதிட்டை செய்துவிட்டு ஒரு நாழிகைக்குள் இந்த ஆற்றினை தாண்டி விட வேண்டும் இல்லையென்றால் நான் உன்னை பிடித்துக்கொள்வேன் என கூறியது. வீமன் ஐந்தாவதை பிரதிட்டை செய்துவிட்டு ஆற்றினை தாண்டுவதற்குள் தாய் காண்டாமிருகம் ஒரு காலை பிடித்துவிடுகிறது. காலை மட்டும் தானே பிடித்தாய் என இருவருக்கும் சர்ச்சை வர வழக்கு தருமரிடம் வருகிறது. தருமரோ தம்பி எனவும் பாராமல் வீமனில் பாதி உனக்கே சொந்தம் என தீர்ப்பு அளிக்கிறார். வீமனை இரண்டாக பிளக்க முற்படுகையில் இறைவன் காட்சி தந்து அனைவருக்கும் அருள் தருகிறார். இதுவே இப்பகுதியில் கரும்பூர் வழக்கா போங்க என்பர் , அதாவது ஆளுக்கு பாதியா ஐந்து கற்களைவைத்த இடங்கள் இந்த கரும்பூர், கொரத்தி ஆகும். அந்த லிங்கங்களே இவை எனப்படுகிறது. இக்கோயில் இடம் தனியாரிடம் உள்ளதால் திருப்பணிகள் செய்யாமல் போடப்பட்டுள்ளது இக்கோயில் பல்லவர்காலம் ஆகும் என ஆய்வர்கள் கூறியதாக சொன்னார். இந்த கதையினை சுதை சிற்பமாக அய்யனார் கோயிலில் செய்து வைத்துள்ளனர். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கரும்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி