Wednesday Nov 27, 2024

கச்சுகட்டு அக்னிமஹாலிங்கம் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :

கச்சுகட்டு அக்னிமஹாலிங்கம் சிவன்கோயில்,

கச்சுகட்டு, திருவிடைமருதூர் வட்டம்,

தஞ்சாவூர் மாவட்டம் – 612101.

இறைவன்:

அக்னிமஹாலிங்கம்

இறைவி:

கற்பகாம்பாள்

அறிமுகம்:

பிரதான சாலையில் இருந்து வழி சொல்லவேண்டுமானால் ஆடுதுறை- திருநீலக்குடி- திருமலைராஜபுரம் சென்று வடமட்டம் சாலையில் சென்றால் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது மல்லபுரம் இந்த மல்லபுரத்தின் மறுகரையில் உள்ளது தான் கச்சுகட்டு கிராமம் சிறிய பாலம் ஒன்று இரு ஊரையும் இணைக்கிறது. கச்சுகட்டில் கிழக்கு நோக்கிய சிவாலயம் உள்ளது, கோயிலின் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. கோயிலுக்கு வாயில் தென்புறம் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். விநாயகர், முருகன் சிற்றாலயங்கள் உள்ளன. கோயில் வாயிலின் எதிரில் பெரிய அரசமரமொன்று தன்னுள் வேம்பு ஒன்றினை உள்ளடக்கி உள்ளதை காணலாம்.இறைவன் அக்னிமஹாலிங்கம் இறைவி கற்பகாம்பாள்

உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கச்சுகட்டு

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவிடைமருதூர், தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top