ஓரங்கூர் சிவன் கோயில், கடலூர்

முகவரி
ஓரங்கூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம்
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
ஓரங்கூர் – கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமம். சிறுப்பாக்கம் – ஓரங்கூர் என செல்லவேண்டும். பனையந்தூர் அருகில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய பழமையான சிவாலயம் உள்ளது. சோழர்காலத்து கம்பீரமான கட்டுமானம் கொண்டு விளங்குகிறது. கருவறை, அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என கோயில் விளங்குகிறது. முகப்பில் ராஜகோபுர கட்டுமானத்தின் அடித்தளம் மட்டும் உள்ளது. மதில்சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. இறைவி தனியாக கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். விநாயகர், முருகன், அம்பிகை ஆகியோருக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. ஊர் கோயிலின் பின் புறம் உள்ளதால் கோயில் தனித்து பராமரிப்பின்றி கழிப்பிடமாக உள்ளது. கருவறையில் இறைவன் இல்லை, தனியாக ஓர் லிங்கம் மட்டும் இடதுபுறம் உள்ளது. உடைந்த பைரவர் சிறிய மண்டபத்தில் உள்ளார். ஓர் கல்வெட்டு உடைந்து கிடக்கிறது. அதில் ஜனநாத வளநாட்டு .. நறையூர் கூற்றத்து எனவும் இவ்வூரினை உறங்கூர் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இறைவன் திருவாலீஸ்வரமுடைய நாயனார் என வரிகள் வருகின்றன. உறங்கூர் விழிப்பதெப்போ?? # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓரங்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி