எருமெலி தர்மசாஸ்தா திருக்கோயில், கேரளா
முகவரி
எருமெலி தர்மசாஸ்தா திருக்கோயில், எருமெலி, கோட்டயம் மாவட்டம், கேரளா மாநிலம் – 686509.
இறைவன்
இறைவன்: ஐயப்பன்
அறிமுகம்
எருமெலி தர்மசாஸ்தா கோயில் என்பது தென்னிந்திய மாநிலமான கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில், எருமேலி நகரில் அமைந்துள்ள ஒரு கோவிலாகும் . இந்த கோயிலானது ஐயப்பன் அல்லது தர்மசாஸ்தாவுக்கான கோயிலாகும். இது சபரிமலை யாத்ரீகர்களின் முக்கியமான பயணச் சந்திப்பு இடமாகும். பந்தள மன்னரான ராஜசேகர பாண்டியன் என்னும் மன்னனால் இந்த இடத்தில் கட்டப்பட்ட ஐயப்பன் கோவில் தான் இது. இந்த கோவிலில் வேட்டைக்குப் போகும் தர்ம சாஸ்தாவாக அம்பு மற்றும் வில்லுடன் காட்சி தருகிறார் ஐயப்பன். எருமைக்கொல்லி என்னும் பெயர் தான் காலப்போக்கில் எருமேலி என்று மருவியிருக்கிறது.
திருவிழாக்கள்
கோயில் ஆண்டுத் திருவிழா (உற்சவம்) பிப்ரவரி மாதத்தில் (கும்பம்) 10 நாட்கள் நடத்தப்பட்டு பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எருமேலி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவல்லா
அருகிலுள்ள விமான நிலையம்
கொச்சி