ஈஸ்வரவாசல் சங்கரநாராயணர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி
ஈஸ்வரவாசல் சங்கரநாராயணர் சிவன்கோயில் திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: சங்கரநாராயணர் இறைவி: சங்கரநாராயணி
அறிமுகம்
திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் NH 148 சாலையில் கங்களாஞ்சேரியில் இருந்து 5 கிமீ. தூரத்தில் உள்ளது ஈஸ்வரவாசல். வெட்டாற்றில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை வாய்க்காலை தாண்டினால் இக்கோயிலை அடையலாம். வாய்க்காலை தாண்ட ஒரு மூங்கில் பாலம் ஒன்றுள்ளது. சிறிய கோயில் தான், இறைவன் சங்கரநாராயணர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், என்றார் எதிரில் நந்தியும் பலிபீடமும் உள்ளது. இறைவி சங்கரநாராயணி தெற்கு நோக்கி கருவறைகொண்டுள்ளார். கருவறை படிக்கட்டின் வாயிலில் கிழக்கு நோக்கியவாறு சனைச்சரன் கிழக்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். கருவறை கோட்டங்களில் மூர்த்தங்கள் ஏதுமில்லை. தென்மேற்கில் சிறிய மாடத்தில் விநாயகரும், வடமேற்கில் தம்பதி சமேத முருகனும் உள்ளனர். சண்டேசர் கோமுகத்தருகே உள்ளார். கருவறையின் நேர் பின்புறத்தில் பெருமாளும் தாயாரும் சன்னதி கொண்டுள்ளனர் இந்த இரு மூர்த்திகளும் அருகாமையில் ஒரு இடத்தில பள்ளம் தோண்டியபோது கிடைத்தவை ஆகும். அவற்றை இங்கே லட்சுமி நாராயணர் எனும் பெயரில் இருத்தியுள்ளனர். கோயில் 300 ஆண்டுகள் பழமையானது என்கின்றனர், திருப்பணி செய்யவேண்டிய நிலையில் உள்ளது. சிறிய கிராமம் என்பதால் பகல் பொழுதில் சில வெளியூர் மக்களே வந்து செல்கின்றனர். கோயில் அருகாமையில் பிரதான சாலையில் உள்ளது அர்ச்சகர் வீடு, இருக்கும்பட்சத்தில் வந்திருந்து தரிசனம் செய்துவைப்பார்.
புராண முக்கியத்துவம்
கிழக்கு நோக்கிய சிவன்கோயில் வெட்டாறின் கிளைவாய்க்கால் இக்கோயிலை வளைத்தபடி ஓடுகிறது இதனால் இதனை விருத்த கங்கா என்றழைப்பர். இது ஒரு சிவாலயமாக இருந்தாலும் உள்ளூர் மக்கள் வழக்கில் சனீஸ்வரர் கோயில் என்றே அழைக்கப்படுகிறது. அது ஏன்? இதற்கு ஒரு கதையும் உள்ளது. ஒருமுறை சனிபகவான் திருகொள்ளிக்காட்டில் இருந்து கிளம்பி திருநள்ளாறுக்கு தனது வாகனமான காக்கையின் முதுகில் அமர்ந்து கொண்டு பயணம் செய்து கொண்டு இருந்தார். இரவு ஆகி விட்டால் காக்கைக்கு கண் தெரியாது. சனி பகவானோ முன் பிறவியில் நள மகாராஜனை பீடிக்க வேண்டிய காலம் வந்து விட்டதினால் திருநள்ளாறுக்கு சென்று கொண்டு இருந்தார். இப்படியான நிலையில்தான் இப்பகுதி வரும்போது, இரவு வந்து விட்டது. வேறு வழி இன்றி காரியூரில் (காரி என்றால் சனி) இறங்கியவர் அங்கேயே தங்கி சிவபூஜை செய்கிறார், ஈஸ்வரனின்வாசலில் தங்கியதால் இவ்வூர் ஈஸ்வரவாசல் ஆனதாம் திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்திற்கு வடகிழக்காக ஈசான்ய பாகத்தில் அமைந்ததால் ஈசான்யவாசல் இதுவாகும். உனக்கு இங்கே இரவு தங்க அடைக்கலம் கொடுத்ததினால், நீ இங்கு மங்கள சனி எனும் பெயரில் இங்கு வீற்றிருந்து எம்மை வணங்கிச் செல்லும் பக்தர்கள் சனி தோஷத்தினால் இருந்தாலும் அவற்றை குறைத்து அவர்கள் வாழ்க்கை மங்களமாக இருக்கும் வகையில் அருள் புரிந்து அனுப்ப வேண்டும்’ என்றார். சிவபெருமானுடைய கட்டளையை மீற முடியாத அவர் இந்த ஆலயத்தில் மங்கள சனீஸ்வரராக அமர்ந்து கொண்டு வந்து செல்லும் பக்தர்களுடைய சனி தோஷ தாக்கத்தைக் குறைத்து அவர்கள் வாழ்வில் மங்களமாக இருக்கும் வகைக்கு அருள் புரிந்து அனுப்புகிறார். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஈஸ்வரவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி