இளங்கடம்பனூர் சோழீஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
இளங்கடம்பனூர் சோழீஸ்வரர் சிவன் கோயில்,
இளங்கடம்பனூர், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
தொடர்புக்கு பாலசுப்பிரமணிய குருக்கள் – 86087 17822
இறைவன்:
சோழீஸ்வரர்
இறைவி:
சௌந்தரநாயகி
அறிமுகம்:
திருவாரூர் – நாகை சாலையில் ஆழியூர் தாண்டியதும் இடதுபுறம் ஒரு சாலை நாகூர் நோக்கி செல்கிறது அதில் திரும்பி வடக்கே 4 கி.மீ தூரம் பயணித்தால், இளம்கடம்பனூரை அடையலாம். இறைவன்-சோழீஸ்வரர். இறைவி-சௌந்தரநாயகி ஊரின் தென்புறம் கோயில் உள்ளது, முகப்பில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதனை கடந்தால் கிழக்கு நோக்கிய இறைவன் தெற்கு நோக்கிய இறைவி சன்னதி உள்ளது இரு சன்னதிகளையும் ஒரு தற்கால சிமென்ட் மண்டபம் இணைக்கிறது அதன் வெளியில் தகர கூரை வேய்ந்த நந்தி மண்டபம் உள்ளது. விநாயகர், முருகன் மகாலட்சுமி ஆகியோருக்கு பிரகாரத்தில் தனி சன்னதிகள் உள்ளன. கோஷ்ட தெய்வங்கள் தென்முகன் மற்றும் துர்க்கை மட்டும் உள்ளன. 2013ல் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
இத்தலம் முருகன் பஞ்ச கடம்ப தல இறைவனை வணங்கி இளைப்பாறிய தலமாகும். அதனால் வீரஹத்தி நீங்கி முருகன் அமைதியான தலமென்பதால் இங்கு முருகனை வழிபட்டு வேண்டும் வரம் பெறலாம். வடகிழக்கில் பைரவர், ஒரு அம்பிகை நவகிரகங்கள், சனி, சூரியன் உள்ளனர். ஒருகால பூஜையில் கோயில் இயங்குகிறது என சொல்லப்பட்டலும் பெரிதாக தொகை ஒன்றும் இ.ச அறநிலைய துரை கொடுப்பதில்லை. பரம்பரையான அர்ச்சகர் குடும்பம் தன் கடமையை செய்து வருகிறது. கோயில் வாயிலிலேயே இவரது வீடு உள்ளது, பூஜைக்கே சிரமம் என்றால் பராமரிப்புக்கு எங்கே போவார்? பிரகாரம் முழுதும் நெருஞ்சி முட்களாக கிடக்கிறது. வைத்த மறு அடி வைக்கவே சிரமம் தான்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”








காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இளங்கடம்பனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி