Friday Nov 08, 2024

இறகுசேரி மும்முடிநாதர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி

இறகுசேரி மும்முடிநாதர் திருக்கோயில், இறகுசேரி, தேவகோட்டை அஞ்சல், சிவகங்கை மாவட்டம் – 630302.

இறைவன்

இறைவன்: மும்முடிநாதர் இறைவி: சௌந்தரநாயகி

அறிமுகம்

இறகுசேரி மும்முடிநாதர் கோயில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு வைப்புத் தலமாகும். சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. இறையான்சேரி என்பது மருவி மக்கள் வழக்கில் இறகுசேரி, இரவுசேரி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள இறைவன் மும்முடிநாதர் ஆவார். இறைவி சௌந்தரநாயகி ஆவார். மூவேந்தர்களாலும் வழிபடப்பட்ட பழமையான சிவாலயம். எனவேதான் இவ்விறைவனுக்கு மும்முடி நாதர் என்றும்; சமஸ்கிருதத்தில் திரி மகுடேஸ்வரர் என்றும் பெயர் உண்டாயிற்று. செம்பராங்கல்லால் ஆன பழமையான கோயிலை, 20ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் விரிவு படுத்தி, கற்றளி கோயிலாக எழுப்பி, 05.06.1922இல் குடமுழுக்கு செய்துள்ளனர். ஏழுநிலை ராஜகோபுரம், நடராஜ சபை, இறைவன்-இறைவி சன்னதி, நால்வர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். தஞ்சை மாவட்டதில் இப்பெயருடைய தலம் ஒன்று உள்ளது. இவை இரண்டுமே தேவார வைப்புத்தலமாகக் கொள்ளப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

இறகுசேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தேவகோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top