இருக்கை பீமேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
இருக்கை பீமேஸ்வரர் சிவன்கோயில்,
இருக்கை, கீழ்வேளுர் வட்டம்,
நாகை மாவட்டம் – 611109.
இறைவன்:
பீமேஸ்வரர்
இறைவி:
அபிராமி
அறிமுகம்:
இருக்கை என்பதின் பொருள் இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம் என பொருள். இந்த இருக்கை எனும் தலத்தை கீழ்வேளூர் –தேவூர் வந்து நான்கு கிமீ தூரம் கடுவையாற்றின் தென்கரையில் சென்று அடையலாம். சிறிய ஆற்றோர கிராமம், செழிப்புடன் மரங்களடர்ந்த பகுதியாக காணப்படுகிறது. சிறியதாக ஒரு சிவாலயம் உள்ளது. இறைவன்-பீமேஸ்வரர் இறைவி- அபிராமி இப்பகுதி மகாபாரதத்துடன் தொடர்புடையது. ஐவரும் வழிபட்ட தலங்கள் அருகருகே உள்ளன.
பீமன் வழிபட்டதால் பீமேஸ்வரர் என பெயர் வந்ததாக கூறுகின்றனர் கிழக்கு நோக்கிய திருக்கோயில் சுற்று மதில் சுவருடன் உள்ளது. கிழக்கில் வாயில் உள்ளது. இறைவன் சதுர பீடம் கொண்ட லிங்கமூர்த்தியாவார். அவரின் முன்னர் அழகிய நாயக்கர் கால கூம்பு வடிவ மண்டபம் உள்ளது. இறைவி அபிராமி தெற்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார். இறைவனுக்கு நேர் எதிரில் முகப்பு மண்டபத்தின் வெளியில் நந்தி மண்டபம் பலிபீடம் உள்ளது. வடக்கில் ஒரு பெரிய பலாமரம் ஒன்று கடந்த கால சிரமங்களை வென்றெடுத்த இக்கோயிலை பெருமையுடன் பார்த்த வண்ணம் நிற்கிறது. தற்போது திருப்பணிகள் முடிந்து ஆகஸ்ட் 12-ல் குடமுழுக்கு கண்டுள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இருக்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி