இரண்டாம் கட்டளை கைலாசநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி :
இரண்டாம் கட்டளை கைலாசநாதர் சிவன்கோயில்,
இரண்டாம் கட்டளை, கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612202.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
அய்யாவாடி- அம்மன்குடி சாலையில் எட்டு கிமீ தொலைவில் உள்ளது இந்த இரண்டாம் கட்டளை கிராமம். துளஜா மன்னர் திருவிடைமருதூர் கோயிலுக்கு பூஜை நிபந்தங்களாக கொடுத்த ஏழு கட்டளை கிராமங்களில் இது இரண்டாவது. கிழக்கு நோக்கிய இக்கோயில் மிகவும் சிதிலமடைந்து கிடக்கிறது, இறைவன் கைலாசநாதர் கிழக்கு நோக்கியும், இறைவி காமாட்சியம்மன் தெற்கு நோக்கியும் உள்ளனர். நுழைவாயில் தென்புறம் உள்ளது. இறைவன் இறைவி கருவறை தவிர சண்டேசர் சன்னதி மட்டுமே எஞ்சியுள்ளது. மதில் சுவரும் பழுதடைந்துள்ளது. ஆடுகளும் மாடுகளும் பாதுகாப்பாக மேய உள்ளே விடப்பட்டுள்ளன.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரண்டாம் கட்டளை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி