இடையாநல்லூர் மகாலிங்க சுவாமி சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
இடையாநல்லூர் மகாலிங்க சுவாமி சிவன்கோயில், இடையாநல்லூர், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: மகாலிங்க சுவாமி
அறிமுகம்
திருப்பனந்தாள் – திருமங்கலக்குடி சாலையில் உள்ள பழவாற்றின் வடகரையில் உள்ள ஊர் தான் இந்த இடையாநல்லூர். இங்கு கிழக்கு நோக்கிய இறைவன் ஒற்றை கருவறை கொண்டு விளங்குகிறார். இறைவன் பெயர் மகாலிங்க சுவாமி. இக்கோயில் திருப்பனந்தாள் காசி மடத்திற்கு சொந்தமானது ஆகும். இறைவன் சதுர பீடம் கொண்டு பெயருக்கு ஏற்றாற்போல் பெரிய லிங்கமாக காட்சி தருகிறார். இறைவன் முன்னம் ஒரு சிறிய நந்தியும் பலி பீடமும் உள்ளன. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இடையாநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி