இடையமடம் சமணக்கோவில்
முகவரி
இடையமடம் சமணக்கோவில், முத்துக்காடு ரோடு, மருங்கூர், தொண்டி – 623 406.
இறைவன்
இறைவன்: பார்சுவநாதர்
அறிமுகம்
தொண்டி அருகே பாம்பாற்றின் கழிமுகப் பகுதியில் இடையமடம் என்னும் கிராமத்தில் இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வாளர்கள் 9ஆம் நூற்றாண்டை சேர்ந்த சமணப் பள்ளியை கண்டுபிடித்துள்ளனர். மூலஸ்தானம் முன்மண்டபம் என்கிற அமைப்பில் இந்த சமணப்பள்ளி அமைந்துள்ளது. மூலஸ்தானம் செவ்வக வடிவில் உள்ளது. முன் மண்டபத்தின் வலது புறம் உள்ள சுவரில் 27 செ.மீ. உயரமும் 17 செ.மீ. அகலமும் உடைய நின்றகோலத்தில் பார்சுவநாதரின் புடைப்பு சிற்பம் உள்ளது. அவரது தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படமெடுத்து நிலையிலும் முதுகின் பின்புறம் அதனுடன் சுருண்டும் உள்ளது போன்ற சிற்பம் மதுரை கிழக்குடியில் உள்ள பார்சுவநாதரை போன்று உள்ளது. எனவே 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம். இங்கு கல்லாலான சித்த சக்கரம் வெளிப்புற சுவரில் வைத்து கட்டப்பட்டுள்ளது. இதன் கருவறை விமானம் கோபுரம் ஏதுமின்றி தட்டையாக உள்ளது. சதுரவடிவ தூண்களில் தரங்கை அமைப்பு காணப்படுகிறது. இது பாண்டியர் கால கட்டிடக்கலை அமைப்பில் உள்ளது. முன் மண்டபத்தின் உட்புறச் சுவரில் எதிர் எதிரே அமர்ந்த நிலையில் பெரிய அளவிலான நண்டு, இரு மீன்களின் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன. அதேபோல் மூலஸ்தானத்தில் உள்ள சிறிய அளவில் மூன்றும் பெரிய அளவில் ஆறூமாக ஒன்பது புடைப்பு சிற்பமாக உருவம் செதுக்கப் பட்டுள்ளன. இங்குள்ள மீன் சின்னங்களைக் கொண்டு சமணர்களின் பதினெட்டாம் தீர்த்தங்கரரான அரநாதருக்கு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம். அரநாதரின் வாகனம் மீன் என்பது குறிப்பிடத்தக்கது. சமணர்களின் நான்கு வகை பானங்களில் ஒன்று மருத்துவ தானம். முன் மண்டபத்தில் சுவரில் ஒருவர் உரலில் மருந்து இடிக்கும் ஒரு புடைப்பு சிற்பம் உள்ளது. இதன்மூலம் சமண முனிவர்கள் மக்களுக்கு மருத்துவ சேவை செய்துள்ளது அறியமுடிகிறது. சமணப் பள்ளியில் நான்கு கல்வெட்டுக்கள் உள்ளன. ஒரு கல்வெட்டு சிதைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூன்று கல்வெட்டுக்கள் மூலம் இது கிபி 1160 முதல் கிபி 1190 வரை அரசாங்க மாறவர்மன் விக்கிரம பாண்டியன் காலத்தைச் சேர்ந்தது என தெரிகிறது.
காலம்
9 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
SP பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி