ஆவணியாபுரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி
ஆவணியாபுரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், ஆவணியாபுரம், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி
அறிமுகம்
முன்றாம் நந்திவர்ம பல்லவனுக்கு அவனி நாராயணன் எனும் பெயர் இருந்தது, அவனிநாராயணபுரம் என இருந்து பின்னர் ஆவணியாபுரம் என மருவியிருக்கலாம். அவனிநாராயணர் எனும் உடைந்து போன ஒரு பெருமாள் சிலை ஒன்றுள்ளது அவர் தான் இவ்வூரின் பெயருக்குரியவராக இருக்கலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் சாலையில் ஆடுதுறையில் இருந்து வீரசோழன் ஆற்றின் கரையோரத்தில் 2 கி.மீ. தொலைவில் உள்ளது ஆவணியாபுரம். ஆடுதுறையில் இருந்து ஆட்டோ பிடிப்பது நல்லது. பல வருடங்களாக சிதைந்து போய் கிடந்த கடந்த கருங்கல் குவியல்களில் இருந்த இறைவன் இறைவி விநாயகர் மற்றும் பிற சிலைகள் தனியாக வைக்கப்பட்டு தகர கொட்டகை போடப்பட்டுள்ளது. இறைவன் அழகாக சதுரபீட ஆவுடை கொண்டு விளங்குகிறார். அம்பிகையும் அழகாக உள்ளார். மங்காகுளம் மாரியம்மன் கோயில் வளாகத்திலேயே இந்த தகர கொட்டகை உள்ளது. இக்கோயில்களின் எதிரில் உள்ள ஒரு பெரிய குளம் மங்காகுளம் என அழைக்கப்படுகிறது. சிவனாருக்கு கோயில் கட்ட எண்ணிய மக்கள் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தின் நிறுவனர் திருவடிகுடில் சுவாமிகளிடம் பேச அவரது ஒத்துழைப்புடன் கோயில் கட்ட 2015-ம் வருஷம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி ஊர்மக்களின் ஒத்துழைப்புடன் பூமி பூஜை போடப்பட்டது. பெயரே தெரியாதிருந்த இறைவன் இறைவிக்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் என திருவுளச்சீட்டு மூலம் பெயர் வைக்கப்பட்டது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை, இறைவி தெற்கு நோக்கிய கருவறை விநாயகருக்கு தனி சிற்றாலயம் என திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. ஐம்பது சதவீத பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில் பணிகள் நின்றுள்ளது. எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின், எனும் குறளுக்கேற்ப பணிகளை முன்னின்று நடத்தும் திரு. A.G.சீனிவாசன் – 9942514470 அவர்களுக்கு நாமும் கரம் கொடுப்போம் # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆவணியாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி