ஆவணம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆவணம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில்,
ஆவணம், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612604.
இறைவன்:
பசுபதீஸ்வரர்
அறிமுகம்:
கும்பகோணம் திருவாரூர் செல்லும் வழியில் மாத்தூரில் இருந்து நன்னிலம் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவு சென்று ஆவணம் பருத்தியூர் சாலையில் 1 ½ கிமீ சென்றால் வலதுபுறம் சிறிய சாலை திரும்புகிறது அதில் ஒரு கிமீ தூரம் சென்றால் ஆவணம் கிராமம் உள்ளது. பல ஆவணங்கள் உள்ளதால் இவ்வூர் ஆவணம் எனப்படுகிறது. குடமுருட்டி ஆற்றுக்கும் கோரையாற்றுக்கும் நடுவே அமைந்துள்ளது இயற்கை எழில் கொஞ்சும் சித்தாடி மற்றும் ஆவணம் கிராமம். ஆவணம் இன்றும் சிறிய கிராமமாக உள்ளது. இங்கு ஒரு பெரிய குளத்தில் கரையில் இருந்த சிவன்கோயில் சிதைந்து போய்விட அங்கிருந்த சிவலிங்கமும் பெரிய நந்தி ஒன்றும் மட்டுமே எஞ்சியுள்ளன. இவரை பசு பூசித்ததாக உ.வே.சா கூறுகிறார். பசுபதீஸ்வரர் எனப்பெயரிடப்பட்ட லிங்கமூர்த்தி பெரிய அளவில் உள்ளார், இவருக்காக ஒரு கருவறை கட்டப்பட்டு பணிகள் பாதியிலேயே நிற்கின்றன.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆவணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி