ஆலத்தூர் விஸ்வநாதசுவாமி சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி சிவன்கோயில்,
ஆலத்தூர், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 614708.
இறைவன்:
விஸ்வநாத சுவாமி
அறிமுகம்:
மன்னார்குடியின் நேர் கிழக்கில் உள்ள திருக்கொள்ளிக்காடு சாலையில் திருவண்டுறை, குன்னியூர் தாண்டி கோரையாற்றின் கரையிலே திருக்கொள்ளிக்காட்டின் ஒரு கிமீ முன்னால் ஆலத்தூர் உள்ளது. மன்னார்குடியில் இருந்து — 18 கிமீ தூரத்தில் உள்ளது. ஆலத்தூர் கோரையாற்றின் தென்கரையில் உள்ளது, கிழக்கு நோக்கி செல்லும் கோரையாறு இவ்வூரை ஒட்டி தென்புறம் தக்ஷிணவாகினியாக திரும்புகிறது. இதனால் தீர்த்த சிறப்பு கொண்ட ஆறு எனலாம். இந்த ஆற்றின் கரையோரத்திலேயே பெரிய குளம் ஒன்றுள்ளது அதன் கரையில் தான் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. மூர்த்தியால் தீர்த்தத்தால் பிரபலமடையாத இக்கோயில் ஒரு கொள்ளையால் பிரபலமடைந்துள்ளது. ஆம்… 50 ஆண்டுகளுக்கு முன்பு ஆலத்தூர் அருள்மிகு விஸ்வநாத சுவாமி கோயிலில் திருடப்பட்ட 3 பழங்கால உலோகச் சிலைகள், லாஸ்ஏஞ்சல்ஸ் – லாஸ்மா அருங்காட்சியகத்தில் வைத்து சிலைக்கடத்தல் பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொள்ளை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. சோமாஸ்கந்தர் விநாயகர் நடனமாடும் சம்மந்தர், மற்றும் சில வைணவ திருக்கோயில் சிலைகள் சென்ற வருடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.
கிழக்கு நோக்கிய சிவன் கோயில் செங்கல் கொண்டு கட்டப்பட்ட திருக்கோயில் முகப்பு மண்டபம் மட்டும் கருங்கல் தூண்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது. பல வருடங்களாக பழுதடைந்து கிடந்த சிவன் கோயில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டும் , அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டும். உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு கருங்கல் தூண்கள் தாங்கும் மண்டபம் உள்ளது. வெளியில் ஒரு கருங்கல் தூண்கள் தாங்கும் மண்டபத்தில் ஒரு நந்தி இறைவனை நோக்கியபடி உள்ளது. கோஷ்டங்களில் இன்னும் சிலைகள் வைக்கப்படவில்லை. சண்டேசருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டு உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் ஏதும் இன்னும் அமைக்கப்படவில்லை. சுற்று சுவரில் கிழக்கு தெற்கு வடக்கு என மூன்று வாயில்கள் வைக்கப்பட்டு உள்ளன. குடமுழுக்கு விரைவில் நடைபெற உள்ளது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மன்னார்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி