ஆர்பார் யமதண்டீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆர்பார் யமதண்டீஸ்வரர் சிவன்கோயில்,
ஆர்பார், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம்.
இறைவன்:
யமதண்டீஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
குடவாசல் – திருவாரூர் சாலையில் ஐந்து கிமீ தூரம் சென்றால் புதுக்குடி இவ்வூரின் தெற்கில் உள்ள நெய்குப்பை வழி ஐந்து கிமீ தூரம் சென்றால் ஆர்பார் கிராமம் அடையலாம். சோழர்காலத்தில் ஆரப்பாழ் என அழைக்கப்பட்ட ஊராகும் இது. இராஜராஜ சோழரின் பெரியகோவில் கல்வெட்டு ஒன்றில், மருத்துவர் ஒருவருக்கு அவரின் பணிக்காக, ஆரப்பாழ் என்ற ஊரை தானமாக அளித்ததை “மருத்துவப்பேறு” என குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் 10 நூற்றாண்டில் சிறந்து விளங்கிய ஒரு மருத்துவரைப் பற்றியும், ராஜராஜசோழன் தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவத்தைப் போற்றிப் பாதுகாத்ததையும், தமிழ் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடிகிறது.
கோயில் குடமுழுக்கு நடைபெற்று 15 ஆண்டுகள் கடந்ததை அறிவிக்கிறது. மருத்துவர்களை போற்றும் வண்ணம் இவ்வூரையும் இக்கோயிலையும் காக்கவேண்டியது நம் கடமை ஆகும்.
புராண முக்கியத்துவம் :
சிவபெருமான் மீது பாசக் கயிற்றை வீசியதால் ஏற்பட்ட தோஷத்தைப் போக்க, யமன் அவரது தந்தை சூரியனிடம் ஆலோசனை பெற்று சிறப்பு மிக்க (வெட்டாறு) அகத்தியகாவேரி நதிக்கரையில் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி சிவபெருமானை நினைத்து தவம் செய்தார். தவத்தில் திருப்தியடைந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்க, இறைவன் மீது பாசக்கயிற்றை வீசியதால் ஏற்பட்ட பாவத்தை மன்னிக்கும்படி யமன் சிவபெருமானிடம் வேண்டினான். சிவபெருமான் யமனை மன்னித்து அவனது சக்திகளையும் யமதண்டத்தையும் கொடுத்தார். அதனால் சிவபெருமான் “யம தண்டீஸ்வரர்” என்று அழைக்கப்படுகிறார். இதனை யமகதாயுதம் என்றும் சொல்வார்கள் வேறு கோயில்களிலும் யமதண்டீஸ்வரர் பெயருக்கு இதேபோன்ற ஸ்தல புராணத்துடன் சொல்லப்படுகிறது.
நம்பிக்கைகள்:
இக்கோயிலில் வழிபடும் அனைத்து பக்தர்களுக்கும் தீராத தோஷம் நீங்கும், ஆயுட்காலம் நீடிக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
சிறிய அழகான ஊர், ஆயிரம் ஆண்டுகளின் முன்னம் கல்வெட்டில் கூறப்பட்டபடி ஆங்காங்கே குளங்களும் சிவன், பெருமாள் கோயில்களும் பிடாரி மற்றும் ஐயனார் கோயிலும் உள்ளன. சிவன்கோயில் கிழக்கு நோக்கியது, இரு ஏக்கருக்கும் பெரியதான வளாகத்தில் தென்னைமரங்களும் பூ மரங்களும் கொண்டதாக உள்ளது. இறைவன் யமதண்டீஸ்வரர், கிழக்கு நோக்கியும் இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கியும் தனி தனி கோயில் கொண்டுள்ளனர். தரை மட்டம் வரை கருங்கல்லும் அதற்க்குமேல் செங்கல் கொண்டும் இரு கருவறைகளும் கட்டப்பட்டுள்ளன.
இன்று நாம் காண்பது சிறிய கோயில்கள் தாம், மிக எளிமையான கட்டுமானம் கொண்டவை, எனினும் கீர்த்தி மிக்கவை இறைவன் கருவறை வாயிலில் சிறிய விநாயகர் உள்ளார். நேர் எதிரில் பெரிய இடைவெளியில் நந்தி மண்டபம் அமைந்துள்ளது. இறைவன் கருவறை கோஷ்டங்கள் என தென்முகனுக்கும், துர்க்கைக்கும் உள்ளன. பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். சண்டேசர் சிறிய கோயில் கொண்டுள்ளார். தெற்கு நோக்கிய அம்பிகையின் கோயில் தனித்தே உள்ளது இதற்க்கு முகப்பில் ஒரு கான்கிரீட் மண்டபம் உள்ளது அதில் மேற்கு நோக்கிய பைரவர் அருகில் சூரியனும் உள்ளனர்.
அம்பிகை கோயிலை ஒட்டி வடக்கு நோக்கிய சிறிய செல்லியம்மன் கோயில் உள்ளது. நவக்கிரக மண்டபம் ஒன்றும் உள்ளது. சிதைவடைந்த தக்ஷணமூர்த்தி சிலை ஒன்றும் தனித்து உள்ளது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆர்பார்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி