ஆமூர் சிவன் கோயில், திருவாரூர்
முகவரி
ஆமூர் சிவன் கோயில், ஆமூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
பல மாவட்டங்களில் ஆமூர் எனும் பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன, இந்த ஆமூர், திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரின் தெற்கில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது. சிறிய சாலையோர கிராமம் தான். இங்கு கிழக்கு நோக்கிய ஒரு சிறிய சிவாலயம் ஒன்றுள்ளது. இறைவன் பெயர் ஊர்காரர்கள் சிலரிடம் விசாரித்ததில் அவர்கள் அதனை சிவன்கோயில் என்ற அளவில் மட்டுமே அறிந்து வைத்துள்ளனர். பெயரும் அங்கே எழுதப்படாத காரணத்தால் அறிய இயலவில்லை. கோயிலின் பின் பக்கமே தெரு செல்வதால் பிரதான வழி மேற்கில் உள்ளது.
புராண முக்கியத்துவம்
இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர். கருவறை முன்னம் ஒரு முகப்பு மண்டபம் உள்ளது அதன் எதிரில் சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார், திருப்பணிகள் நடந்து வருகின்றன. அதனால் சில மூர்த்தங்கள் தனித்து வைக்கப்பட்டுள்ளன.. புடவை கட்டிய ஒரு பெண்?? தெய்வம் ஒன்று வலது கையில் சக்கராயுதம் கொண்டும் மறுகையில் சூலம் போன்று இருக்கிறது. யாரென அறியமுடியவில்லை. கிழக்கு நோக்கியபடி வைக்கப்பட்டுள்ளது, துர்க்கையாக இருக்கலாம். இரு விநாயகர்களும் அழகிய சுப்ரமணியரும் உள்ளார்கள், நவகிரகங்கள் திருவாரூர் கோயிலில் உள்ளதை போல தெற்கு நோக்கி ஒரே வரிசையில் உள்ளது. அருகில் ஒரு மாடத்தில் ஓர் லிங்கமும், மறுமாடத்தில் பைரவரும் உள்ளனர். வடக்கில் சண்டேசர் சன்னதியும், வடகிழக்கில் ஒரு கிணறும் உள்ளது. கோஷ்டத்தில் தக்ஷணமூர்த்தியும், லிங்கோத்பவரும் உள்ளார்கள். #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆமூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி