ஆபரணதாரி காசி விஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
ஆபரணதாரி காசி விஸ்வநாதர் திருக்கோயில்,
ஆபரணதாரி, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611104.
இறைவன்:
காசி விஸ்வநாதர்
இறைவி:
காசி விசாலாட்சி
அறிமுகம்:
ஆவராணி எனும் இத்தலம் நாகப்பட்டினம் – திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்கலிலிருந்து தென்மேற்கில் 3கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. சிக்கலின் தென்புறம் செல்லும் தொடர்வண்டி பாதையை கடந்தவுடன் எழில் சூழ்ந்த பச்சை நெல்வயல்கள். அதன் மத்தியில் பெரியகுளத்தின் கரையில் கால் நீட்டி சயனித்திருக்கிறார் பெருமாள். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. முதலாவது ஊரின் முகப்பிலேயே உள்ளது, அவர் அருணாசலேஸ்வரர், மற்றொரு கோயில் பெரிய குளத்தின் கிழக்கு கரையில் சாலையோரம் உள்ள இவர் விஸ்வநாதர். இக்கோயில் பெருமாள் கோயிலின் பார்வை தூரத்திலேயே உள்ளது. முன்பு பார்த்த அருணாசலேஸ்வரர் கோயில் போலவே இந்த விஸ்வநாதர் கோயிலும் பெரும் சிதைவுக்கு ஆளாகி உள்ளது.
சுற்று மதில் சுவர்கள் வீழ்ந்துவிட்டன. மேலிருந்து வேர்கள் தரை வரை இறங்கி சுவர்களை பிளக்க வைத்துள்ளன. விதானம் வழி விண்ணை பார்க்கலாம். இறைவன் கருவறை முன்னர் ஒரு மண்டபம் அந்த மண்டபத்தில் கிழக்கிலும் தெற்கிலும் வாயில்கள் உள்ளன. இறைவன் – காசி விஸ்வநாதர் இறைவி – காசி விசாலாட்சி இறைவன் சிறிய லிங்க ரூபத்தில் உள்ளார் அம்பிகையும் சிறியதாகவே உள்ளார். இறைவன் எதிரில் உள்ள நந்தியும் சிறிய அளவினதாகவே உள்ளது. கருவறை வாயிலில் ஒருபுறம் விநாயகர் உள்ளார். கருவறை கோட்டங்கள் காலியாக உள்ளன. சண்டேசரையும் காணவில்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆபரணதாரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி