ஆத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் சிவன்கோயில்,
ஆத்தூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610103.
இறைவன்:
ரெத்தினபுரீஸ்வரர்
இறைவி:
அபிராமி
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே செல்லும் பூசலாங்குடி, ராதாநல்லூர், வழியாக செல்லும் பாதையில் தொடர்ந்து நான்கு கி.மீ. சென்றால் ஆத்தூர் எனும் இத்தலத்தை அடையலாம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் வடகரையோரம் உள்ளது. அதனால் ஆற்றூர் என பெயர் வந்திருக்கலாம். சிறிய கிராமம்தான், சிவன் கோயில் கிழக்கு பகுதியில் உள்ளது, கிழக்கு நோக்கிய கோயிலின் வடபுறம் ஒரு பெரிய குளம் உள்ளது. இறைவன் ரெத்தினபுரீஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி அபிராமி தெற்கு நோக்கியும் கருவறை கொண்டுள்ளனர். இரு கருவறைகளையும் ஒரு திறந்த மண்டபம் இணைக்கிறது. அதில் கருவறை வாயிலில் விநாயகரும் இறைவன் நேர் எதிரில் மண்டபத்தின் வெளியில் நந்தியும் உள்ளனர். விமானம் அழகான துவிதள விமானமாக உள்ளது. கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார். விநாயகர் முருகன் மகாலட்சுமி மூவருக்கும் தனி சிற்றாலயங்கள் உள்ளன. பெரியதொரு வில்வமரம் சண்டேசர் சன்னதியை ஒட்டி வளர்ந்து நிற்கிறது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆத்தூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி