ஆண்டாங்கரை கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ஆண்டாங்கரை கைலாசநாதர் சிவன்கோயில்,
ஆண்டாங்கரை, திருத்துறைபூண்டி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610203.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
உமையாம்பிகை
அறிமுகம்:
திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் 20-கிமீ தூரம் சென்றவுடன் ஆலத்தம்பாடி எனும் இடத்தில குறுக்கிடும் அரிச்சந்திரா நதியில் தென் கரையில் ஆறு கிமீ தூரம் சென்று இதே அரிச்சந்திரா நதியை தாண்டினால் ஆண்டாங்கரை கிராமம் உள்ளது சிறிய அழகிய விவசாய கிராமம். ஊரின் வடகிழக்கில் இந்த சிவாலயம் அமைந்துள்ளது.
இறைவன் – கைலாசநாதர் இறைவி உமையாம்பிகை
சோழமன்னர்களின் காலத்தில் பெரிய அளவில் கட்டப்பட்டு இருந்த இக்கோயில் முற்றிலும் சிதைந்துவிட, பல ஆண்டுகளாக முயற்சித்து இக்கோயிலை, கடந்த மூன்று ஆண்டுகளின் முன்னர் முற்றிலும் புதியதாக மாற்றி கட்டப்பட்டது.
முற்றிலும் செங்கல் கொண்டு கட்டப்பட்ட திருக்கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் கைலாசநாதர் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார். அம்பிகை தெற்கு நோக்கிய தனி ஆலயத்தில் உள்ளார். இறைவன் முன்னர் நீண்ட தகரகொட்டகை ஒன்று வேயப்பட்டுள்ளது. அதன் வெளியில் இறைவனை நோக்கியவாறு நந்தியும் பலிபீடமும் உள்ளது. கருவறை கோட்டங்களில் தென்முகன், சங்கு, சக்கரம், கதாயுதம் ஏந்திய நிலையில் விஷ்ணுவும், வடக்கில் துர்க்கையும் உள்ளனர். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகன், சண்டேசர் மற்றும் மேற்கு நோக்கிய பைரவர் தனி தனி சன்னதியில் உள்ளனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆண்டாங்கரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர், திருத்துறைபூண்டி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி