அவணம்குளம் சுப்ரமண்யன் கோயில், கேரளா
முகவரி
அவணம்குளம் சுப்ரமண்யன் கோயில், எடச்சலம் கிராமம், குட்டிப்புரம், கேரளா 679571
இறைவன்
இறைவன்: சுப்ரமண்யன், சிவன்
அறிமுகம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் குட்டிபுரத்தில் உள்ள எடச்சலம் கிராமத்தில் உள்ள அவணம்குளம் சுப்ரமண்யன் கோயில் பழங்கால கோவிலாகும். இது திப்பூ சுல்தானின் படையெடுப்பின் போது அழிக்கப்பட்டது. இந்த கோயில் பல நூற்றாண்டுகள் பழமையானது, ஆனால் இப்பழமையான கோயில் தற்போது இடிந்து கிடக்கிறது. முதன்மை தெய்வம் சுப்ரமணி, சிவன். இங்கே வேறு தெய்வம் இல்லை. கோவிலின் சிலைகள் முற்றிலும் சிதைந்து கிடக்கின்றன.
புராண முக்கியத்துவம்
1988 ஆம் ஆண்டில் உள்ளூர் மக்கள் இந்த கோயிலின் மறுசீரமைப்பைத் தொடங்கினர், ஆனால் அதை முடிக்க முடியவில்லை. இன்றும் மக்கள் பால சுப்ரமண்ணியனை வணங்குகிறார்கள். படையெடுப்பு மூலம் சிலைகள் துண்டுகளாக வெட்டப்பட்டு உள்ளது. இந்த பழங்கால கோவிலின் மறுசீரமைப்பை முடிக்க உக்ரா நரசிம்ம அறக்கட்டளை எடுத்துள்ளது. ஆனால் இன்றும் இந்த கோயில் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
எடச்சலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குட்டிப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோழிக்கோடு