Tuesday Apr 01, 2025

அழகப்பன் நகர் மூவர் திருக்கோயில், மதுரை

முகவரி :

அருள்மிகு மூவர் திருக்கோயில்,

சுந்தரர் தெரு, அழகப்பன் நகர்,

மதுரை-625 003

தொடர்புக்கு: 0452-2482248

இறைவன்:

சொக்கநாதர்

இறைவி:

மீனாட்சி அம்மன்

அறிமுகம்:

மூவர்கோயில், மதுரை மாவட்டத்தின் அழகப்பன் நகர் புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். சொக்கநாதர் சுவாமியை மூலவராகக் கொண்ட இக்கோயிலில், மூலவருக்குப் பின்புறம் விஷ்ணு, மீனாட்சி அம்மன் மற்றும் சிவன் ஆகிய மூவரும் (சிவபெருமானுக்கு மீனாட்சியம்மனை திருமணத்திற்காக விஷ்ணு தாரை வார்த்து) காட்சியளிப்பதால் இக்கோயில் மூவர் கோயில் என்றழைக்கப்படுகிறது. மேலும், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவர் மற்றும் பார்வதி, இலட்சுமி, சரசுவதி ஆகிய முப்பெரும் தேவியர் சன்னதிகளும் இக்கோயிலில் இடம் பெற்றுள்ளதாலும் இக்கோயில் மூவர் கோயில் என்ற திருநாமத்துடன் திகழ்கிறது.

புராண முக்கியத்துவம் :

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும்  முத்தொழில்களை இறைவன் செய்கிறார்.  இதை குறிக்கும் வகையில் இந்தக் கோயிலில் படைப்புக் கடவுள் பிரம்மா, காக்கும் கடவுள் விஷ்ணு, காக்கும் கடவுள் சிவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.  இவர்களது தேவியரான சரஸ்வதி, லட்சுமி , சக்திக்கும் இங்கு சன்னதிகள் உள்ளன. எனவே, இது மூவர் ஆலயம் எனப்படுகிறது. இங்குள்ள விநாயகர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு செல்வவளம், வேண்ய காரிய சித்தியையும் அருளும் விதத்தில் உள்ளதால் “செல்வவிநாயகர்’ என பெயர் பெற்ள்ளார்.

சிறப்பு அம்சங்கள்:

விஜயவாடா கனகதுர்க்கை : விஜயவாடாவை நினைவூட்டும் வகையில் இங்கு கனகதுர்க்கை சன்னதி அமைந்ள்ளது. ராகுகாலத்தில் கனகதுர்க்கையை வழிபாடு செய்பவர்களின் விருப்பங்கள் நிறைவேறும்.

நால்வரோடு வள்ளலார்: ஞானசம்பந்தர், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வருடன், சன்மார்க்கத்தை போதித்த வள்ளலாரைம் இணைத்து சன்னதி அமைத்துள்ளனர்.

புதுமைக் கோயில்: இங்கு உண்டியல் கிடையாது. சன்னதிகளில் விளக்கேற்றுவதை கோயில் நிர்வாகமே செய்கின்றனர். நாள்தோறும் காலையில் ஆலயத்தின் அனைத்து மூத்திகளுக்கும்  அஷேகம் செய்து, வஸ்திரம் மாற்றப்படுகிறது. ஆலயத் தூய்மை கருதி யாரும் விளக்கேற்ற அனுமதிப்பது இல்லை. கிரகணகாலம், தீட்டுக்காலம் என எதற்க்கும் நடைசாத்துவது வழக்கம் இல்லை.

கல்யாணக்கோல கருவறை: மதுரையில் நடக்கும் மீனாட்சிக் கல்யாணம் மிகவும் பிரசித்திப்பெற்றது. அதை நினைவூட்டும் வகையில் இங்குள்ள மூலவர் சன்னதியில் சிவலிங்கத்திற்க்கு பின்புறம் விஷ்ணு, மீனாட்சி, சிவன் மூவரும் வரிசையாக நிற்க்கின்றனர். மீனாட்சியம்மனின் கல்யாணக்கோலத்தை குறிப்பிடும் வகையில் இச்சன்னதி அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கத்தை சனிபிரதோஷம் மற்றும் மகாசிவராத்திரி நாட்களில் தங்க நாகாபரணத்தில் அலங்கரிக்கின்றனர்.

யாரும் பூஜை செய்யலாம்: பக்தியுள்ள ஆண்,பெண்யாராக இருந்தாலும் இக்கோயில் கவறைக்கு சென்று பூஜை செய்ய அனுமதிப்பது தனிச்சிறப்பாகும்.

திருவிழாக்கள்:

விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், மகாசிவராத்திரி.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அழகப்பன்நகர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top