அலிவலம் பூமிநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
அலிவலம் பூமிநாதர் திருக்கோயில்,
அலிவலம், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
இறைவன்:
பூமிநாதர்
இறைவி:
அறம்காத்தநாயகி
அறிமுகம்:
திருவாருருக்கு நான்கு கிமீ கிழக்கில் உள்ள கடாரம்கொண்டான் சென்று அதன் தெற்கில் ஒரு கிமீ தூரம் சென்றால் உள்ளது அழகான அலிவலம். கிழக்கு நோக்கிய திருக்கோயில், கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றுள்ளது. அம்பிகை தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் – பூமிநாதர் இறைவி- அறம்காத்தநாயகி பிரசித்தி பெற்ற மண்ணச்ச நல்லூர் பூமிநாதர் அறம்வளர்த்த நாயகி என்ற பெயரிலேயே இங்கும் இறைவன் அருள் பாலிப்பதை காணலாம். கோயில் சோழர்கால கருங்கல் கட்டுமானம் கொண்டது, பிரஸ்தரம் எனப்படும் கூரை வரை கருங்கல் கட்டுமானமாக இருந்துள்ளது. தற்போது அதிட்டானம் எனப்படும் அடித்தளம் வரை மட்டுமே கருகல் உள்ளது. அதற்க்கு மேல் செங்கல் வேலையாகவே உள்ளது.
பிரதான இறைவன் திருகோயில் எண்ணூறு ஆண்டுகளை கடந்ததாக இருக்கும் இறைவன் முன்னர் முகப்பு மண்டபம் ஒன்றுள்ளது. அந்த முகப்பு மண்டபத்தின் வெளியில் இடது புறம் ஒரு பெரிய விநாயகர் உள்ளார். நேர் எதிரில் நந்திக்கு மண்டபம் அமைந்துள்ளது. அம்பிகை தெற்கு நோக்கிய தனி கோயில் கொண்டுள்ளார். இறைவன் கருவறை கோட்டங்களில் தென்முகன் மட்டுமே உள்ளார். பிற மாடங்கள் காலியாக உள்ளன. வடக்கில் துர்க்கை தனி சனந்தியாக உள்ளார். பிரகார சிற்றாலயங்களில் விநாயகர் தென் புறத்திலும் முருகன் வட புறத்திலும் உள்ளனர். கோயில் மதில் சுவற்றில் மேற்கு திக்கிலும் ஒரு வாயில் உள்ளது. வடக்கில் துர்க்கையின் எதிர்ல் ஒரு கிணறு உள்ளது. வடகிழக்கில் நவகிரகம் பைரவர் சந்திரன் சூரியன் உள்ளனர்.
கோயிலின் உள்ளே ஒரு பழுதான பைரவர் ஒன்றும் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் வெளியில் ஒரு சிறிய வேம்பின் கீழ் சில நாகர்களும் நந்தி ஒன்றும் உள்ளது. இவை சிதைவடைந்த பழம் கோயிலின் மீதம் எனலாம். வீடு வாங்குதல், வாஸ்து தோஷம், சொத்து பாகப் பிரச்னைகள், தென்-வட மூலை உயரம், ஜென்ம சாபம், பாப தோஷம், பூமி குற்றம், பில்லி சூன்யம், ஏவல், எந்திரம், மந்திர தோஷங்கள் உட்பட 16 வகையான பூமி பிரச்னைகளுக்கு, இத்தலத்து இறைவனை வழிபடுவதால் நற்பயன் விளைகிறது. அருள்மிகு பூமிநாத சுவாமி கோயிலுக்கு வந்து வணங்கினாலே அனைத்து தோஷங்களும் நீங்கிவிடும்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அலிவலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி