Monday Jan 27, 2025

அருள்மிகு ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு ஸ்ரீ வரதராஜபெருமாள் திருக்கோயில், (பரிகார தலம்) சூணாம்பேடு, செய்யூர் தாலுகா, காஞ்சிபுரம் மாவட்டம்- 603 401.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ வரதராஜபெருமாள் இறைவி : ஸ்ரீ தேவி பூதேவி

அறிமுகம்

சென்னை பாண்டி ECR சாலையில் உள்ள சூணாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது இக்கோயில். மாமல்லபுரம் தல சயன பெருமாள் கோயில் அபிமான தலமாக விளங்குகிறது. ஸ்ரீ ஆண்டாள் , ஆழ்வார்கள், லட்சுமி நரசிம்மர், கல்யாண ராமர் இங்குள்ள இதர சன்னதிகள் இங்கு அமைந்துள்ளன. இங்கு வைகுண்ட ஏகாதசி, ஆடி பூரம், கிருஷ்ண ஜெயந்தி, ஆண்டாள் உற்சவம், ராம நவமி ஆகிய உற்சவங்கள் நடைபெறுகின்றன. தொடர்புக்கு திரு சந்தான பட்டர்=9751736728.

நம்பிக்கைகள்

பரிகார தலம் அனைத்து விதமான கண் நோய்களுக்கும் நிவாரணமளிக்கும் தலமாக விளங்குகிறது. பிரார்த்தனை நிறைவேறிய பின் ஸ்வாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து பிரசாதம் செய்து அன்னதானம் அளிக்க வேண்டும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சூணாம்பேடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top