அருள்மிகு வைஷ்ணவ தேவி திருக்கோயில், ஜம்மு-காஷ்மீர்
முகவரி
அருள்மிகு வைஷ்ணவ தேவி திருக்கோயில், கட்ரா – 182 301, ஜம்மு-காஷ்மீர். Phone: +91 1991 232125
இறைவன்
இறைவி: வைஷ்ணவ தேவி
அறிமுகம்
வைஷ்ணொ தேவி மலைக்கோயில் ஜம்மு நகரத்திலிருந்து 40 கி. மீ., தொலைவில் உள்ள, கட்ரா எனும் நகரத்திற்கு அருகில் 13 கி. மீ., தொலைவில், இமயமலையில் அமைந்துள்ளது. இக்கோயில் இமயமலையில் 5200 அடி உயரமுள்ள திரிகூடமலையின் உச்சியில் இருக்கும் இந்த புனித குகைக்கோயில், முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் உறைவிடமாகும். ஜம்முவிலிருந்து 42 கி.மி. தொலைவில் இருக்கும் இந்த குகை, 30 மி. நீளத்தையும், 1.5 மீ. உயரத்தையும் கொண்டுள்ளது. இந்த குகையின் முடிவில் சூலத்தின் மூன்று முனைகள் போல மூன்று பாறைகள் சுயம்புவாக உள்ளது அது முப்பெரும் தேவியர்களான இலக்குமி, சரசுவதி மற்றும் காளி ஆகியோரின் அருவ வடிவமாகும். பிந்தி என அழைக்கப்படும் அந்த வடிவங்களே மாதா ராணியாக வணங்கப்படுகிறது. மாதா வைஷ்ணொ தேவி , மாதா ராணி , வைஷ்ணவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும் மிகவும் புனிதமான இந்து சமய பெண் தெய்வமாவார். வைஷ்ணொ தேவி கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர்பெற்ற புனிதத் தலமாகும். இக்கோவில் வைஷ்ணவ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு குகை கோவில். குகையின் நீளம் சுமார் 30 மீட்டரும், உயரம் 1.5 மீட்டரும் கொண்டது. வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்குப் பிறகு மிகவும் அதிகமாக வழிபாட்டாளர்கள் திரளாக வந்து இறைவனை வழிபடும் கோவில்களில் இக்கோவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
புராண முக்கியத்துவம்
திரேதா யுகத்தில், தீமை மற்றும் கொடுங்கோன்மை ஆட்சியால் பூமி சுமையாக இருந்தபோது,முப்பெரும் தேவியரும் ரேமா (லட்சுமி), உமா (காளி) மற்றும் வாணி (சரஸ்வதி) ஆகிய வடிவம் கொண்டு வைஷ்ணொ தேவியை உருவாக்கினர்.ஒளிப்பிழம்பு வடிவிலான தேவி திரிகூட மலை உச்சியில் உள்ள குகையில் தோன்றினார். பூமிக்கு சுமையாக இருந்த தீமை மற்றும் பேய்களை அழித்தபின், வைஷ்ணொ தேவி பூமியில் வசிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார், இதனால் அவள் மனித அவதாரம் எடுக்க முடிவு செய்தாள்.அதன்படி இந்தியாவின் தெற்கு பாகத்தில் நீண்ட நாட்களாக குழந்தை பேறு கிடைக்காமல் வாழ்ந்து வந்த ரத்னாகர்சாகர்-சம்ரிதி தேவி தம்பதியர் வீட்டில் அன்னை வைஷ்ணொ தேவி பிறந்தார்.குழந்தைப்பருவத்தில் அன்னை வைஷ்ணொ தேவி, திரிகுடா என அழைக்கப்பெற்றார்.விஷ்ணுவின் தீவிர பக்தரான ரத்னாகர் அவரது குழந்தை பெருமாளின் அவதாரமாகக் கருதப்பட்டதால் அவர் வைஷ்ணவி என நாமம் சூட்டினார். திரிகுடாவிற்கு 9 வயது நிரம்பியதும், அவர் கடற்கரை அருகே கடும் தவம் மேற்கொள்ள தந்தையிடம் அனுமதி கேட்டார். திரிகுடா ராமர் ரூபத்தில் விளங்கும் பெருமாளை மிகவும் தீவிரமாக வழிபட்டார். ராமர் தமது படைகளுடன் சீதையைத் தேடிக்கொண்டு கடற்கரை ஓரமாக வந்தார். அவரது கண்கள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய பெண்ணின் மேல் விழுந்தது. திரிகுடா ராமரிடம் அவரை தனது கணவராக ஏற்றுக்கொண்டதாகக் கூறினார். ராமர் அவரிடம் இந்த அவதாரத்தில் அவர் தமது மனைவியான சீதைக்கு மட்டுமே நேர்மையான கணவனாக இருக்க உறுதி பூண்டிருப்பதாக அறிவித்தார்.இருந்தாலும் என்றேனும் ஒருநாள் அவரை மணந்து கொள்வதாக வாக்களித்தார்.அதேசமயத்தில் ராமர் திரிகுடாவிடம் வட இந்தியாவில் நிலை கொண்டுள்ள மாணிக்க மலையில் அமைந்துள்ள திரிகுடா மலைத்தொடரில் உள்ள குகையில் தவம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். அன்னை அவர்கள் ‘நவராத்திரி’யின் பொழுது ராமர் ராவணனுக்கு எதிராக வெற்றி காண்பதற்காக நோன்பு மேற்கொண்டார். இந்த தொடர்பை நினைவு கூறுவதற்காகவே நவராத்திரியின் ஒன்பது நாட்களில், மக்கள் இராமாயணத்தைப் படிக்கும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.ராவண வதம் நடந்த பிறகு அயோத்தியின் அரசராக பதவியேற்றுக்கொண்ட ராமர் ஒரு முதியவர் ரூபம் கொண்டு திரிகுடா தேவி முன் தோன்றி அவரை மணந்து கொள்ளும்படி வேண்டினார். வந்திருப்பது யாரென அறியாத தேவி அவரை நிராகரித்தார். பின்னர் உண்மை உருவில் வெளிவந்த இறைவன் இப்பிறவியில் ஏகபத்தினி விரதம் பூண்டிருப்பதாகவும் கலியுகத்தில் அவர் மீண்டும் கல்கி அவதாரம் எடுக்கப்போவதாகவும், அப்போது அவரை திருமணம் செய்து கொள்வதாகவும் வரம் அளித்தார்.மேலும் திரிகுடா மிகவும் புகழ்பெற்ற அன்னை வைஷ்ணொ தேவியாக மாறுவார் மற்றும் என்றென்றைக்கும் அமரராக நிலைத்திருப்பார் அனைத்து உலகமும் அன்னை வைஷ்ணொ தேவியின் புகழைப்பாடுவார்கள் எனவும் வரமளித்தார் தேவி மங்கையராக வளரும் பருவத்தில் அவளை கவர்ந்து செல்ல எண்ணிய பைரவன் என்னும் அரக்கனிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள குகையில் ஒளிந்துக்கொள்கிறாள் தேவி. ஆனால் பைரவன் அவளை கண்டுக்கொள்ள தேவி அங்கு சக்தி வடிவமாக வெளிப்பட்டு அவனை சம்ஹராம் செய்கிறாள். ஆக்ரோஷத்துடன் பைரவரின் தலையைத் துண்டித்தார், அதன் விளைவாக துண்டித்த மண்டை ஓடானது பைரவ் காடி என்று அழைக்கப்பெறும் புனித குகையில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இடத்தில் சென்று விழுந்தது. இறக்கும் தருவாயில், பைரவர் தன்னை மன்னிக்கும் படி அன்னையிடம் வேண்டிக்கொண்டார். பைரவர் முக்தி அடைவதற்காகவே அவரைத் தாக்கினார் என்பதை அன்னை தெய்வம் அறிந்திருந்தார். அவர் பைரவருக்கு மறுபிறவி என்ற காலச்சக்கரத்தில் இருந்து முக்தி அளித்தார். மேலும், ஒவ்வொரு பக்தனும், அன்னை தெய்வத்தின் தரிசனம் பெற்றபின்னர் புனித குகையின் அருகிலிருக்கும் பைரவ நாதரின் கோவிலுக்கும் தவறாமல் சென்றால் மட்டுமே பக்தர்கள் அவர்களுடைய புனித யாத்திரையின் பலனைப் பெறுவார்கள் என்ற வரத்தையும் பைரவனுக்கு அளித்து அருள் பாலித்தார். அதேநேரத்தில் வைஷ்ணொதேவி தன்னை மூன்று சூலங்களுடைய (தலைகள்) கல்லாக உருமாற்றம் செய்து கொண்டார் மேலும் என்றென்றைக்கும் மீளாத தவத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டார்.
சிறப்பு அம்சங்கள்
இந்தியாவின் வட எல்லையில் உள்ள அம்மன் தலம் இது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது வைஷ்ணதேவி சக்தி பீடம் ஆகும். இங்கு அம்மன் சிலை வடிவில் இல்லாமல் அரூபமாக அருள்பாலிக்கிறாள். அதுமட்டுமில்லாமல் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி மூவரும் ஒரே மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கின்றனர்.
திருவிழாக்கள்
நவராத்திரி, சிவராத்திரி, தீபாவளி
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
ஜம்மு-காஷ்மீர்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கட்ரா
அருகிலுள்ள இரயில் நிலையம்
கட்ரா
அருகிலுள்ள விமான நிலையம்
ஜம்மு