அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருக்காரிக்கரை (ராமகிரி)
முகவரி
அருள்மிகு வாலீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ராமகிரி அஞ்சல் – 517589, சித்தூர் மாவட்டம், அந்திரா மாநிலம்.
இறைவன்
இறைவன்: வாலீஸ்வரர் இறைவி: மரகதாம்பாள்
அறிமுகம்
ஆந்திரா மாநிலத்தில் உள்ள வைப்புத்தலம். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நாகலாபுரத்திற்கு அடுத்துள்ளது. மக்கள் ராமகிரி என்று அழைக்கின்றனர். அழகிய பசுமை நிறைந்த சிற்றூர் பேருந்தில் கோயில் வரை செல்லலாம். (காவேரி) காரியாற்றின் கரையில் உள்ள ஊர். எனவெ காரிக்கரை என்றாயிற்று. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் இத்தலத்தை வழிபட்டுச் சென்றதாக பெரியபுராணம் கூறுகிறது. ஆனால் அவர்கள் பாடிய பதிகங்கள் கிடைக்கவில்லை. சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருஇடையாறு பதிகத்தில் குறிப்பிடுகிறார். பழமையான சிவாலயம். இத்தலம் காலபைரவர் தலம் என்று போற்றபடுகிறது. ராமபிரானின் கட்டளைப்படியே பிரதிஷ்டை செய்ய ஆஞ்சநேயர் சிவலிங்கத்தை கொண்டு வரும்போது அதைத் தன்னிடத்தில் இருத்திக்கொள்ள பைரவர் எண்ணி அதற்கான ஒரு உபாயத்தை மேற்கொண்டார். அதன்படி ஆஞ்சநேயருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சிவலிங்கத்தை தரையில் வைக்கக்கூடாது என்று எண்ணி சிறுவனாக அங்கு வந்த பைரவரிடம் தந்துவிட்டு சென்றார். அவர் குளத்தில் இறங்கி நீர் பருகி வருவதற்குள் வலுவாக உள்ளது என்று சொல்லி சிறுவன் பூமியில் வைத்துவிட்டான். ஆஞ்சநேயர் தன் வாலால் சுற்றி பலமாக இழுத்தார் பயனில்லை. சிவலிங்கம் சாய்ந்தது சாய்ந்தது தவிர அதை எடுக்க முடியவில்லை. ஆதலின் பெருமான் இங்கேயே பிரதிஷ்டை ஆனார். வாலால் சுற்றி வலத்தமையால் சுவாமி வாலீஸ்வரர் என்னும் பெயர் பெற்றார். ஆஞ்சநேயர் கோபத்தில் வீசிய மலையை இதற்கு முன்பு இங்கிருந்த காளிங்க மடு என்னும் நீர் நிலையில் விழுந்து, அதனால் நீர் நிலை அழிந்து மலை ஏற்றப்பட்டது. எடுத்துவரப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை ஆனதால் ”ராம்” என்பதும், நீர் நிலை மறைந்து மலை ஏற்பட்டதால் “கிரி” என்பதும் சேர்ந்து இப்பகுதி பிற்காலத்தில் ராமகிரி என்று வழங்கலாயிற்று. ராஜகோபுரமில்லை. முகப்பு வாயில் வழியாக உள்ளே சென்றால் நந்தி தீர்த்தம்.நந்தி தீர்த்தம் இக்குளம் கோயிலில் முகப்பிலேயே உள்ளது. நந்தியின் வாயிலிருந்து இடையறாத நீர் கொட்டிகொண்டேயுள்ளது. உள்ளே சென்றால் காலபைரவர் தரிசனம் – பிரதான மூர்த்தி. எதிரில் கல் நாய் உள்ளது. காலபைரவர் புத்திர பாக்கியம் தரும் பெருமை வாய்ந்தவர். ஆதலின் அவரிடம் பிரார்த்தித்து சிறப்பு வழிபாடுகள் செய்து அருள் பெற்றோர் தங்கள் எண்ணம் நிறைவேறி அதற்காக கொண்டுவந்து வைத்துள்ள சிறு சிறு நாய்க்குட்டிகள் அதை சுற்றிலும் உள்ளது. மூலவர் அருள்மிகு வாலீஸ்வரர் சற்று சாய்ந்த நிலையில் உள்ளார். வாலால் சுற்றியிழுத்த தழும்புகள் திருமேனியில் உள்ளது. எதிரில் நந்தியும் பலிபீடமும் அடுத்து ஆஞ்சநேயர் உள்ளார். மரகதாம்பாள் சன்னதி தனியே உள்ளது. திருப்பணிகள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. தொல்ப்பொருள் ஆய்வுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பல்லவர்கள் சிதலமாகியதால் பிற்கால சோழர்கள், விஜயநகர மன்னர்கள் 1485-ல் இதற்கு கோபுரம் கட்ட முயன்றார். அதற்காக அடித்தளம் அமைத்தார். புருஷோத்தமன் கஜபதி என்பவன் திடீரென்று படையெடுத்து ”ஒட்டியன் கலாபம்” என்ற போர் மூண்டதால் பணி நின்று போயிற்று. கி.பி. 1064-ல் வீரராசேந்திர சோழன் என்பவன் சாளுக்கியருடன் போரிட்டு, வென்று திரும்பும் வழியில் கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கியதாக கல்வெட்டால் அறிகிறோம். ஆரணி நதிக்கரையை சுற்றிலும் 5 இடங்களில் மரகதாம்பாள் மூர்த்தங்கள் உள்ளன அவற்றுள் ஒன்று காரிக்கரை. இத்திருக்கோயிலின் மார்கழி பிரதமையில் அனுமத்ஜயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவிலின் அருகில் உள்ள சிவத்தலம் சுருட்டப் பள்ளியாகும்
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராமகிரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சித்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருப்பதி