அருள்மிகு மானஸா சக்தி பீடத் திருக்கோவில், திபெத்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/shri-manasa-shakti-peeth-temple-tibet.jpg)
முகவரி
அருள்மிகு மானஸா தேவி சக்தி பீடத்திருக்கோவில் மானசரோவர் ஏரி, திபெத், சீனா
இறைவன்
சக்தி: தாக்ஷாயினி பைரவர்: அமர பைரவர், உடல் பகுதி அல்லது ஆபரணம்: வலது உள்ளங்கை
அறிமுகம்
மானஸா தேவி சக்தி பீடம் திபெத்தில் அமைந்துள்ளது. இந்த சக்தி பீடம் குறிப்பாக மானசரோவர் ஏரி என்று அழைக்கப்படும் மிகவும் தூய்மையான மற்றும் புனிதமான நீர்நிலைக்கு அருகில் உள்ளது. இங்கே, மானஸா தேவி (சக்தியின் வடிவம்) மற்றும் அமர பைரவர் (சிவபெருமானின் வடிவம்) காணப்படுகிறார்கள். இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படுகிறது. விஷ்ணு, சதியை இழந்த துக்கத்திலிருந்து சிவனை விடுவிப்பதற்காக, தனது ‘சுதர்சன் சக்கரத்தை’ பயன்படுத்தி சதி உடலைத் தூண்டாக்கினார். இந்தத் தலத்தில்தான், தேவியின் வலது உள்ளங்கை விழுந்ததாகப் புராணங்கள் குறிப்பிடுகின்றன. தேவியை பல்வேறு சக்தி பீடங்களில் வேறு பெயர் வழங்கப்பட்டுள்ளதால், இந்த தேவியை தாக்ஷாயினி (துர்கா) என்று அழைக்கப்படுகிறது. மேலும் சிவபெருமானுக்கு வழங்கப்பட்ட பெயர் அமரர் (அழியா) ஆகும். முழு பூமியின் தூய்மையான மற்றும் மத இடமாக இது திகழ்கிறது, இங்கு மக்கள் தங்கள் ஆசைகளை பூர்த்தி செய்ய முடியும். எந்த ஆலயமோ தெய்வமோ இல்லை ஒரு பெரிய கற்பாறை மட்டுமே இங்கே காணப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார். சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் சக்தி பீடங்களாயின. சிவபெருமானின் ஊழித்தாண்டவ நடனத்திலிருந்து உலகைக் காப்பாற்ற விஷ்ணு சுதர்ஷன சக்கரத்தைப் பயன்படுத்தியபோது சதியின் வலது உள்ளங்கை இங்கு விழுந்ததாகக் கூறப்படுகிறது.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காத்மாண்டு
அருகிலுள்ள இரயில் நிலையம்
தனக்பூர்
அருகிலுள்ள விமான நிலையம்
நகரி குன்சா