Sunday Jun 30, 2024

அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் , அளப்பூர் (தரங்கம்பாடி)

முகவரி

அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் தரங்கம்பாடி தரங்கம்பாடி அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609313

இறைவன்

இறைவன்: மாசிலாமணி ஈஸ்வரர்

அறிமுகம்

அளப்பூரிலுள்ள மாசிலாமணி ஈஸ்வரர் கோயில் கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த இக்கோவில் கடலின் தொடர் சீற்றத்தால் மிகவும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது தொல் பொருள் ஆய்வுதுறையின் பராமரிப்பில் இருக்கிறது. கடலின் சீற்றத்தால் இக்கோவில் மேலும் மேலும் பழுதடைவதைத் தடுக்கும் பொருட்டு இந்து சமய அறநிலையத் துறை கோயிலை ஒட்டியும், கடலுக்குள் 50 மீட்டர் நீளத்திற்கும் கருங்கல்கள் கொட்டும் பணியை செய்துள்ளது. கோயிலின் பின்புறம் 26 லட்சத்தில் 10 சன்னதிகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், பழைய சந்நிதியை 3.5 லட்சத்தில் சீரமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

புராண முக்கியத்துவம்

இன்று இவ்வூர் தரங்கம்பாடி என்று வழங்குகிறது. வரலாற்றுச் சிறப்புடைய தலம். தரங்கம்பாடி கடற்கரையில் மே மாதம் முழுவதும் வீசும் ஓசோன் எனப்படும் சஞ்சீவி பர்வதக் காற்று உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது என்று கூறுகின்றனர். கோயில் கடலோரத்தில் உள்ளது. கடல் அலைகள் மோதுவதனால் கோயிலின் முற்பகுதி முழுவதும் அழிந்து விட்டது. கற்களெல்லாம் கடல் நீரில் வீழ்ந்து கிடக்கின்றன. இக்கற்களின் மீது ஏறிச் சென்றே – கடல் நோக்கி வீற்றிருக்கும் பெருமானைத் தரிசிக்க வேண்டும். மூலவரும், விநாயகரும் மட்டுமே கோயிலில் உள்ளனர். மூர்த்தங்கள் எல்லாம் – அகிலாண்டேஸ்வரி, பாலசுப்பிரமணியர், சண்டேசுவரர், துர்க்கை, மகாலட்சுமி, நவக் கிரகங்கஷீமீ – கோயிலுக்குப் பக்கத்தில் ஓரிடத்தில் வைத்துப் பாதுகாக்கப் பட்டுப் பூசைகள் நடைபெற்று வருகின்றன.

காலம்

1000 to 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தரங்கம்பாடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top