அருள்மிகு மலம்பட்டி சிவன் கோயில்
முகவரி
அருள்மிகு மலம்பட்டி சிவன் கோயில், மலம்பட்டி, கீரனூர், புதுக்கோட்டை – 621 316
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
ஆறுகால பூஜை செய்து ராஜராஜசோழன் போற்றிய கோயில் சிதிலமடைந்து புதர்மண்டிக்கிடக்கும் அவலம்! ஆயிரம் வருடங்களை கடந்து, ராஜராஜ சோழனின் புகழையும், பெருவுடையாரின் பெருமையையும் தாங்கி `தட்சிணமேரு’ என்ற பெயருடன் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெருவுடையார் கோயில். `சூரியன் சந்திரன் உள்ளவரை இந்தக் கோயில் நிலைத்திருக்கும்’ என்று ராஜராஜனே கல்வெட்டில் கூறியுள்ளதைப் போன்றே, இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் தஞ்சைப் பெரிய கோயில். ஆனால், ராஜராஜ சோழன் கட்டிய சிவன் கோயில் ஒன்று, கால மாற்றத்தில் சிதைந்து அழிந்துபோனது வேதனையிலும் வேதனை. புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரனூருக்கு அருகே இருக்கிறது மலம்பட்டி கிராமம். இங்கு லிங்கமலை என்ற சிறு குன்றுக்குப் பின்னால், ஒரு காலத்தில் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்ட சிவன் கோயில் மறுசீரமைப்பு செய்ய முடியாதபடி முற்றிலும் சிதிலமடைந்து கிடக்கிறது. ஒரு காலத்தில், ஆறுகால பூஜை செய்து பக்தர்களால் வழிபடப்பட்ட சிவலிங்கம் கேட்பாரின்றி புற்களுக்கு நடுவே பரிதாபமான நிலையில் கிடக்கிறது. அம்மன், பெருமாள், நந்தி, பூதகணங்களின் சிலைகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. கோயிலுக்கு அருகில், கிரானைட் குவாரியின் கிரஷர்களில் அரைபட்டதில் எஞ்சிய ஒரேயொரு கல்வெட்டு மட்டும் ராஜராஜனின் பெயரைத் தாங்கிக்கொண்டு புதரில் கிடக்கிறது. `மொத்தக் கோயிலும் கிரஷர்களில் அரைபட்டு அழியும்முன்பு சிதைந்துபோன கோயிலையும், சிதறிக்கிடக்கும் சிலைகளையும் அரசு உரிய முறையில் பாதுகாக்க வேண்டும்’ என்று வரலாற்று ஆர்வலர்களும் பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீரனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கீரனூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி