அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்)
முகவரி
அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், ஈசனூர் – (மேலைஈசனூர்) கீழையூர் – அஞ்சல் – 611 103, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம்.
இறைவன்
இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: சுகந்த குந்தளாம்பிகை
அறிமுகம்
மக்கள் ஈச்சனூர் என்று வழங்குகின்றனர். நாகப்பட்டினம்- திருத்துறைப்பூண்டி பேருந்து வழியில் உள்ள தலம். சுவாமி தருமபுரீஸ்வரர், அம்பாள் – சௌந்தரநாயகி என்றும், சுந்தரரின் திருஇடையாறு பதிகம் 8ஆவது பாடலில் இத்தலப் பெயர் வைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய நூற்குறிப்பு தெரிவிக்கின்றது. கோயிலின் பெரும்பகுதி அழிந்து கருவறை, அர்த்தமண்டபமே உள்ளதென்றும், புதர் மண்டிக் கிடக்கிறது. நிர்வாகம் ஒரு தனிப்பட்ட குடும்பத்தினரின் பொறுப்பில் உள்ளது என்றும் மேலும் அக்குறிப்பு தெரிவிக்கின்றது. ஆனால் அப்பகுதியில் இருப்பிடத்தை அறிய முடியவில்லை. யாரை கேட்டாலும் அப்படி ஒரு கோயில் இல்லை என்கின்றனர். இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும். அதே நாகப்பட்டினம் – திருத்துறைப் பூண்டிச் சாலையில் கீழையூர் தாண்டி மேலை ஈசனுர் நிறுத்தம் என்று விசாரித்து (அங்குள்ள பாலத்தையொட்டி) வலப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது தொலைவு சென்றால் மேலை ஈசனுர் என்ற ஊர் வருகிறது. சுமாரான ஒற்றைச் சாலை. சிறிய ஊர். அங்குச்சிறிய கோயில் உள்ளது. நல்ல நிலையில் உள்ளது. இறைவன் – பிரம்மபுரீஸ்வரர், இறைவி – சுகந்த குந்தளாம்பிகை. ஸ்வாமியும் அம்பாளும் பக்கத்தில் ஒருசேர உள்ளனர். எனவே யாத்திரையாக செல்வோர் இக்கோயிலை கண்டு தரிசிக்கலாம்.
காலம்
1000 – 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கீழையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி