Saturday Nov 23, 2024

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில், விளமல்

முகவரி

அருள்மிகு பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் விளமல்,திருவாரூர் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் PIN – 610002 PH:9894781778

இறைவன்

இறைவன்: பதஞ்சலி மனோகரர், இறைவி:

அறிமுகம்

திருவிளமர் அல்லது விளமர் (விளமல் பதஞ்சலி மனோகரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 90ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் மீது பாடப்பெற்ற மத்தக மணிபெற மலர்வதொர் மதிபுரை நுதல்கரம் என்று தொடங்கும் பாடலை முதலாக உடைய தேவாரப் பதிகம் மூன்றாம் திருமுறையுள் அடங்குகிறது.

புராண முக்கியத்துவம்

சிவபெருமான் காட்டிய ருத்ரபாதத்திற்கு இன்றளவும் தினமும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நம்பிக்கைகள்

கோபுர வாயிலின் இருபுறமும் விநாயகரும் முருகனும் வீற்றிருக்கின்றனர். உள்ளே நந்தி, பலிபீடம் ஆகியவற்றைக் காணலாம். கோவில் முன் மண்டபத்தில் பதஞ்சலி முனிவரின் திரு உருவம் உள்ளது. வியாக்ரபாத முனிவர், சூரியன் ஆகியோர் இத்தலத்தில் இறைவனை வழிபட்டுள்ளனர். அவர்களின் சந்நிதியும் இக்கோவிலில் உள்ளது. இறைவன் கிழக்கு நோக்கி மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள மூலவரின் முன்பு தீப வழிபாடு நடக்கும் போது, அந்த ஒளி லிங்கத்தில் பிரதிபலித்து, லிங்கமானது தீபஜோதியாக தெரிவதை காணலாம்.

சிறப்பு அம்சங்கள்

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அடங்கிய திருவாரூர் வட்டத்தில் அமைந்துள்ளது. தல விருட்சம்: வில்வம் தீர்த்தம்: அக்கினி தீர்த்தம்

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விளமல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சிராப்பள்ளி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top