அருள்மிகு பஞ்சாட்சரபுரசுவரர் திருக்கோயில், பஞ்சாக்கை
முகவரி
அருள்மிகு பஞ்சாக்கை பஞ்சாட்சரபுரசுவரர் கோயில், பஞ்சாக்கை – திருக்கடவூர் – அஞ்சல் – 609311, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PH:04364-287429
இறைவன்
இறைவன்: பஞ்சாட்சரபுரீசுவரர், அக்னிசுவரர்.
அறிமுகம்
தமிழ் நாடு மயிலாடுதுறை – ஆக்கூர் முக்கூட்டு – வழியாகப் பொறையாறு செல்லும் சாலையில் திருக்கடவூருக்கு முன்பாக அன்னப்பன் பேட்டை என்று கேட்டு – அங்கிருந்து இடப்புறமாக கீழே இறங்கிச் செல்லும் சாலையில், வீடுகள் நிறைந்த பகுதி வழியே சென்று -வயல் வெளிமேட்டில் கீற்றுக் கொட்டகையில் காட்சி தரும் பெருமானைத் தரிசிக்கலாம். சாலையில் உள்ள இடம் – அன்னப்பன் பேட்டை. குடிசை வீடுகள் நிறைந்த பகுதி – பஞ்சாக்கை. மொத்தமே 30வீடுகள். அத்தனையும் ஏழையோர் வாழ்கின்ற குடிசைகள், சாலையில் இருந்து இறங்கி நடந்து செல்ல வேண்டும். கோயில் முழுவதும் அழிந்து விட்டது. தருமையாதீனம் கொட்டகை வேய்ந்து சிவலிங்கத்தை எழுந்தருளச் செய்துள்ளார்கள். மூலவரைத் தவிர வேறு எதுவுமில்லை. திருக்கடையூரிலிருந்து அர்ச்சகர் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் மட்டும் வந்து ஒருவேளை பூசை செய்துவிட்டுப் போகிறார். மார்கழி மாதத்தில் மட்டும் குருக்கள் தினந்தோறும் வந்து செல்கிறாராம். ஆண்டுக்கொரு முறை தருமையாதீனம் வந்து தரிசித்துச் செல்வதாக மக்கள் சொல்கின்றனர். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆக்கூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி