அருள்மிகு நேத்ரபாலேஸ்வரர் திருக்கோயில், சீர்காழி
முகவரி
அருள்மிகு நேத்ரபாலேஸ்வரர் திருக்கோயில், கண்ணுக்கினியனார் கோவில், சீர்காழி – 609 104.
இறைவன்
இறைவன்: நேத்ரபாலேஸ்வரர் இறைவி: நீலோத்பலாம்பால்
அறிமுகம்
நாகப்ப்ட்டினம் மாவட்டம், சீர்காழி தாலுக்கா, சீர்காழி – மாதானம் வழித்தடத்தில் உள்ள கண்ணுக்கினியனார் கோவில் என்ற கிராமத்தில் அ/மி ஸ்ரீநீலோத்பலாம்பள் சமதே ஸ்ரீ நேத்ரபாலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோவில் பல நூற்றாண்டு பழமையானது. மிகப்பெரிய இக்கோயிலில் தீர்தவாரி உட்பட பல வழிபாடுகள் நடைபெற்றுவந்தது. ஆனால் ஆங்கிலேய படையெடுப்பினால் முற்றிலும் சிதிலமடைந்து காணப்படுகிறது. தற்போது அனைத்து தெய்வ விக்கிரங்களை ஒரு ஒட்டு கொட்டகையில் வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த ஒட்டு கொட்டகையில் வைத்தே 200 வருடங்கள் ஆகிவிட்டன. ஆகவே இப்பழமையான சிவாலயத்தை சீரமைத்து கும்பாபிஷேகம் செய்து தர வேண்டும் என்று வேண்டுகிறோம். தமிழகத்தில் கண் சம்பந்தப்பட்ட பெயருடன் சுவாமி அருள்பாலிக்கும் மிக சில கோவில்களில் இவ்வாலயமும் ஒன்று.
காலம்
1000 to 2000
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
0