Friday Jun 28, 2024

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில் (கேது ஸ்தலம்), கீழப்பெரும்பள்ளம்.

முகவரி

அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோவில், ”கேது ஸ்தலம்” கீழப் பெரும்பள்ளம், வாணகிரி அஞ்சல், தரங்கம்பாடி வட்டம், நாகை மாவட்டம்.

இறைவன்

இறைவன்: நாகநாத சுவாமி, இறைவி: செளந்தரநாயகி

அறிமுகம்

கீழப்பெரும்பள்ளம் நாகநாதர் கோயில் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள சிவத்தலம் ஆகும். இத்தலத்தின் மூலவர் நவக்கிரங்களில் ஒருவரான கேது தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவரை நாகநாதர் எனவும், அம்பாள் சவுந்தர்யநாயகி எனவும் அழைக்கப்படுகின்றார். நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மூலவராக நாகநாதர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் சேது சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. தல விருட்சம்: மூங்கில் தீர்த்தம்: நாகதீர்த்தம் ஆகமம்: காமிகம்

புராண முக்கியத்துவம்

ஏறத்தாழ 1900 வருடங்களாக இருந்து வரும் ஒரு கோவில் ஆகும். நவகிரகங்களில் இது கேதுவுக்கு உரியது. சோழ மன்னர்கள் கட்டிய அழகான கோவில். இந்த தலத்தின் வரலாறு என்னவெனில், தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற பாற்கடலை கடைந்தபோது வாசுகி என்ற நாகத்தை கயிறாக பயன்படுத்தினர். தொடர்ந்து பாற்கடலை கடைந்ததால் வாசுகி பலவீனமவீ டைந்தது. ஒருகட்டத்தில் களைப்பால் விஷத்தை உமிழ்ந்தது. பயந்து போன தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். அவர் விஷத்தை விழுங்கி, தேவர்களை காப்பாற்றினார். தனது விஷத்தை, சிவன் விழுங்க வேண்டிய நிலை ஏற்பட்டதற்காக வாசுகி வருந்தியது. சிவஅபச்சாரம் செய்ததற்கு பிராயச்சித்தமாக தவமிருந்தது. வாசுகிக்கு காட்சி தந்த சிவன், பாவ விமோசனம் கொடுத்ததோடு, அதன் தியாக உணர்வை பாராட்டினார். அப்போது வாசுகி, தனக்கு அருள் செய்த கோலத்தில், தனக்கு காட்சி கொடுத்த இடத்தில் எழுந்தருள வேண்டும் என்று வேண்டியது. அதன் வேண்டுதலை ஏற்ற சிவன், நாகத்தின் பெயரைத் தாங்கி, “நாகநாதர்’ என்ற பெயருடன் இத்தலத்தில் அமர்ந்தார். நுழைவாயிலில் இறைவன் தேவியுடன் காளைமீது அமர்ந்த நிலையில் உள்ள சுதைச்சிற்பம் உள்ளது. வாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் விநாயகர், பலிபீடம், நந்தியைக் காணலாம். மூலவராக நாகநாதர் உள்ளார். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். மூலவர் சன்னதியின் இடப்புறம் கேது சன்னதி உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், துர்க்கை, யோக நரசிம்மர், லட்சுமி நாராயணர், கஜலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன.

நம்பிக்கைகள்

நரம்பு, வாயு தொடர்பான பிரச்சனை மற்றும் பயம் நீங்க, தொழில், வியாபாரம் சிறக்க, தம்பதியர் ஒற்றுமையுடன் இருக்க, ஆயுள் அதிகரிக்க, குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைக்க, தலைமுறை சிறக்க நாகநாதரையும், கேதுபகவானையும் வழிபடலாம். ஜாதகத்தில் கேது தசாபுத்தி நடப்பவர்கள், ஜென்மநட்சத்திரத்தில் பாலபிஷேகம் செய்து வழிபடலாம்.

சிறப்பு அம்சங்கள்

எமகண்டகால வழிபாடு: இக்கோயிலில் கேது பகவானுக்கு ராகுகாலம் மற்றும் எமகண்டத்தில் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜை நடக்கிறது. அப்போது, 16 வகையான அபிஷேகம் மற்றும் ஹோமம் செய்தும், கொள்ளுப்பொடி, உப்பு, மிளகு கலந்த சாதத்தை நைவேத்யமாக படைத்தும், பலவண்ண வஸ்திரம் சாத்தியும், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றியும் வழிபடுகிறார்கள். கொள்ளு சாத பிரசாதத்தை இங்கேயே விநியோகித்துவிட வேண்டும். வீட்வீ டிற்கு எடுத்துச் செல்லக்கூடாது. இதை கோயிலிலேயே செய்து தருகிறார்கள். இதற்கு ரூ.75 கட்டணம். சனி, திங்கள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் இவரை வழிபடுவது விசேஷம். அபிஷேகத்திற்கு ரூ.450, தனிப்பட்ட முறையில் ஹோமம் நடத்துவதற்கு ரூ.3,500 கட்டணமாக வசூலிக்கின்றனர். தொழில், வியாபாரம் சிறக்கவும், வழக்கு, தம்பதியர் பிரச்னை, விபத்து, மரணபயம், நரம்பு, வாயு தொடர்பான பிரச்னைகள் நீங்கவும் கேதுவிடம் வேண்டிக்கொள்ளலாம். பங்குனியில் வாசுகி உற்சவம் நடக்கிறது. விழாவின் மூன்றாம் நாளில் கேதுவிற்கு, சிவன் காட்சி தந்த நிகழ்ச்சி நடக்கும். வருடத்தில் இவ்விழாவின்போதும், கேது பெயர்ச்சியின்போது மட்டுமே, கேது வீதியுலா செல்வார். விசேஷ ஹோமம்: ராகு கேது பெயர்ச்சியன்று விசேஷ ஹோமம் நடக்கிறது. அர்ச்சகர்களே இதை நடத்த உள்ளனர். இதில் பங்கேற்க கட்டணம் கிடையாது. கேதுவிற்கு உரிய எண் 7. எனவே, 16 வித பூஜை செய்து, 7 லட்சம் ஜபமந்திரம் சொல்லி, பின்பு கொள்ளு தானியம், கொள்ளினால் செய்யப்பட்ட பாயசம், சூர்ணம், வடை, சாதம், பொங்கல் மற்றும் கொள் உருண்டை என 7 விதமான நைவேத்யங்களை ஹோமத்தில் இடுகின்றனர். பக்தர்கள் 16 விதமான தானங்களை அந்தணர்களுக்கு செய்வதன் மூலம் பலனடையலாம். அன்று 7 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானமும் நடக்கிறது. இதற்குரிய பொருட்களையும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்திடம் முன்னதாகவே கொடுக்கலாம். இரட்டை சூரியன்: கேது இங்கு பிரதான மூர்த்தி என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. கேது சன்னதிக்கு அருகில் இரண்டு சூரியன் சிலைகளும், சனீஸ்வரர் சிலையும் உள்ளன. உத்ராயண புண்ணிய காலத்தில் (தை- ஆனி) ஒரு சூரியனுக்கும், தெட்சிணாயண புண்ணிய காலத்தில் (ஆடி- மார்கழி) மற்றொரு சூரியனுக்கும் விசேஷ பூஜை நடக்கிறது.

திருவிழாக்கள்

சிவராத்திரி, ஐப்பசியில் அன்னாபிஷேகம், பங்குனியில் வாசுகி உற்சவம்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழப்பெரும்பள்ளம்.

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

தஞ்சாவூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top