அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், செம்பங்குடி
முகவரி
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில், செம்பங்குடி அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609104
இறைவன்
இறைவன்: நாகநாதசுவாமி இறைவி: கற்பூரவல்லி, திரிபுரசுந்தரி
அறிமுகம்
சீகாழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 3 கி.மீ. ல் செம்பங்குடி உள்ளது. விசாரித்து குறுகிய பாதை வழியாக கோயிலை அடையலாம். சீர்காழி தலபுராணத்தில் இப்பகுதி செம்பியான்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. திருநாவுகரசர் அருளிய ஆறாம் திருமுறையில் மனித இடர்களை போக்கும் தலங்களூள் ஒன்றாக விளங்கும் என்று கூறியுள்ளார். கேது வழிபட்ட தலம். ஆதியில் கேது பூஜித்த லிங்கம் ஆதலால் கேதீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். ஊருக்கு சற்று ஒதுங்கிய இடத்தில் இச்சிவாலயம் அமையப்பெற்றுள்ளது. மகா மண்டபம் அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் அழகிய சிறிய திருமேனியாய் வீற்றிருக்கிறார். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும்.
புராண முக்கியத்துவம்
பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது. நடை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு முதலியவற்றை நீக்கும் மருந்தாக அமிர்தம் விளங்கியது. அந்த அமிர்தத்தை தேவர்களும், அசுரர்களும் உண்ண போட்டியிட்டனர். அசுரர்கள் அமிர்தத்தை உண்டால் அவர்களுக்கு அழிவு இருக்காது. ஆகையால் அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க மாகாவிஷ்ணு முடிவெடுத்தார். ஆனால் ஒரு அசுரன் மட்டும் தேவர் வடிவம் கொண்டு சூரிய, சந்திரர்களுக்கு நடுவே நின்று தேவாமிர்தத்தை வாங்கி உண்டான். இதனை அறிந்த சூரிய, சந்திரர்கள் தேவாமிர்தத்தை பரிமாறி கொண்டிருந்த மகாவிஷ்ணுவிடம் குறிப்பால் உணர்த்த, அவர் தன் கையிலிருந்த கரண்டியால் அந்த அசுரனை ஓங்கி அடித்தார். அவர் அடித்த வேகத்தில் அசுரனின் கழுத்து துண்டிக்கப்பட்டு தலை, சிரபுரம் என்ற தற்போதைய சீர்காழியிலும், உடல் மற்றொரு இடத்திலும் விழுந்தது. தேவாமிர்தம் உண்டதால் அந்த அசுரனது இரண்டு உடல் பாகங்களும் இரண்டு பாம்புகளாக மாறியது. இந்த அரவங்கள் சிவபெருமானை தியானித்து காற்றை மட்டும் உணவாக கொண்டு கடும் தவம் புரிய இறைவன் பார்வதி சமேதராய் இடப வாகனத்தில் எழுந்தருளினார். மேலும், இது ஆதிகேது தலமாகப் போற்றப்படுகின்றது.
நம்பிக்கைகள்
இந்தக் கோயிலில் மனிதத் தலை மனித உடலுடன் நாகம் குடைபிடிக்க அமர்ந்திருக்கும் ஸ்ரீ கேது பகவானை, எமகண்ட வேளையில் பலவண்ண ஆடை அணிவித்து கொள்ளு பொடி சாதம் நைவேத்தியம் செய்து வழிபட்டால் பல்வேறு தோஷங்கள் நீங்கி நலம் பெறலாம் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
ஆதிகேது தலமாகப் போற்றப்படுகின்றது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி