Sunday Jan 26, 2025

அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், திண்டீச்சரம் (திண்டிவனம்)

முகவரி

அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, திண்டிவனம் – அஞ்சல் – 604 001, விழுப்புரம் மாவட்டம்.

இறைவன்

இறைவன்: திந்திரிணீஸ்வரர் இறைவி: மரகதவல்லி, மரகதாம்பாள்

அறிமுகம்

தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும். சென்னையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் இத்தலம் வழியாகச் செல்கின்றன. சென்னையிலிருந்து வரும்போது திண்டிவனம் வந்து, மேம்பாலம் மூலம் ரயில் இருப்புப் பாதையினைத் தாண்டி ஊருக்குள் சென்றால் கோயிலை அடையலாம். கோயில் உள்ள தெருவுக்கு ஈஸ்வரன் கோயில் தெரு என்று பெயர். மக்கள் ‘ஈசுவரன் கோயில்’ என்றும் ‘திந்திரிணீஸ்வரர் கோயில்’ என்றும் வழங்குகின்றனர். திந்திருணி, புளிதிந்திருண்வனம் – புளியமரக்காடு, இச்சொல் மருவி வழக்கில் திண்டிவனம் என்றாயிற்று. புளியமரக் காடுகளால் சூழப்பட்ட பகுதி என்று பெயர். பெரிய கோயில். ஐந்து நிலைகள் கொண்ட பழமையான ராஜ கோபுரம், கீழ்ப்புறம் கருங்கல்லாலும் மேற்புறம் செங்கல்லாலும் கட்டப்பட்ட கட்டுமானமுடையது. செடிகள் முளைத்துள்ளன. திருப்பணி செய்ய வேண்டியது மிகவும் அவசியமானதாகும். கோயில் கிழக்கு நோக்கி சந்நிதி. வால்மீகி முனிவர் பூஜித்தது. துர்க்கை சந்நிதி சலவைக்கல் பதிக்கப்பட்டு சிறப்பாகவுள்ளது. இராகு கால வழிபாடு நடைபெறுகிறது. அம்பாள் நான்கு கரங்களுடன் நின்ற கோலம். மூலவர் உயரமான மூர்த்தி – கம்பீரமாக காட்சி தருகிறார். இச்சிவாலயக் கல்வெட்டில் இவ்வூர் “ஓய்மாநாட்டு….. திருத்தீண்டீஸ்வரம்” என்று குறிக்கப்பட்டுள்ளது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள நடு நாட்டு வைப்புத் தலமாகும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திண்டிவனம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திண்டிவனம்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top