அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர்
முகவரி
அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர் , விருத்தாசலம் வட்டம்
இறைவன்
இறைவன்: தருமபுரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி
அறிமுகம்
சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ளது தர்மநல்லூர். விருத்தாசலம் தாலுகா தர்மநல்லூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் யமகன் எனும் எழுத்துக்கள் உள்ளன. தொடர்ச்சியாக 2000ஆண்டுகள் மனித வாழ்வு இருந்த ஊர் தான் இந்த தர்மநல்லூர். இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. இறைவன் தருமபுரீஸ்வரர் இறைவி – திரிபுரசுந்தரி இறைவன் கருவறை விமானம் கஜ பிருஷ்ட்ட விமானமாக உள்ளது. ஆனால் அதிட்டானம் வழமை போல் உள்ளது. கருவறை சுவர்களில் தென்முகன், லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் முருகன், மகாலட்சுமி உள்ளனர். அம்பிகை சன்னதியும் கிழக்கு நோக்கியே உள்ளது. இறைவனுக்கு இடது புறம் அம்பிகை உள்ளார். இது திருமணத்தின் பிந்தைய கோலம் ஆகும், அதனால் இங்கு புதுமணத்தம்பதிகள் வந்து வழிபடுதல் நலம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தர்மநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி