அருள்மிகு தட்சிணகோகர்ணேஸ்வரர் திருக்கோயில், புலிவலம்
முகவரி
அருள்மிகு தட்சிணகோகர்ணேஸ்வரர் திருக்கோயில், புலிவலம் – அஞ்சல் – 610109 திருவாரூர் (வழி) – மாவட்டம்.
இறைவன்
இறைவன்: தட்சிணகோகர்ணேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி
அறிமுகம்
திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில், திருவாரூரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் புலிவலம் உள்ளது. சாலையோரத்தில் அருள்மிகு வெங்கடாசலபதி பெருமாள் கோயில் உள்ளது. அதன் மதில் சுவரை ஒட்டி பின்புறத்தில் உள்ளடங்கி கோயில் உள்ளது. (சுவாமி அம்பாள் பெயரை எழுதி சிறிய பெயர் பலகை சாலையில் வைக்கப்பட்டுள்ளது). கோயில் முற்றிலும் பழுதடைந்துள்ளது. செங்கல் கட்டமைப்பு. மேற்பாகம் முழுவதும் இடிந்து கோயிலை திறந்த வெளியாக உள்ளது. பார்க்கும்போது மனம் படும் வேதனை எழுதி மாளாது. செடிகள் முளைத்து, வேரூன்றிக் கட்டிடம் விரிசல் அடைந்து, கருவறை விமானம் செடிகள் மூடி மரத்தின் வேர்கள் உள்ளே பரவி, பருத்து, எல்லா சந்திதிகளையும் தகர்த்து – கோயில் பரிதாபமாக காட்சி தருகிறது. விநாயகர், இரு சிவலிங்கபாணங்கள் முதலியவை எல்லாம் வெயிலில் வைக்கப்பட்டுள்ளன. சுவாமி – தட்சிணகோகர்ணேஸ்வரர், அம்பாள் ஆனந்தவல்லி. திருவாரூர் தியாகேசர் எந்த சிவபுண்ணிய செல்வரை ஆற்றுப் படுத்திப் புலிவலத்தைப் புதுப்பிப்பாரோ? அவரது திருவுள்ளம் தாம் அறியும். புதுப்பிக்கப்படாவிடில் விரைவில் கோயில் நம்மை விட்டுப் போய்விடும். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத் தலமாகும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புலிவலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி