Monday Jan 27, 2025

அருள்மிகு சிவலோக நாதர் திருக்கோயில், மாமாகுடி

முகவரி

அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், மாமாகுடி அஞ்சல், வழி ஆக்கூர், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் – 609301

இறைவன்

இறைவன்: சிவலோகநாதர், இறைவி: சிவகாமசுந்தரி

அறிமுகம்

சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டை (ஆக்கூர் கூட்ரோடு) அடைந்து – அங்கிருந்து சின்னங்குடி செல்லும் சாலையில் சென்று – ‘கிடங்கல்’ என்னும் இடத்தில், மாமா குடிக்கு இடப்பக்கமாகப் பிரியும் சாலையில் சென்று, ஊரின் முதலில் மாரியம்மன் கோயிலும், அதையடுத்து காளிகோயிலும் வர, அவற்றைத் தாண்டி, ஊருள் மேலும் சிறிது தூரம் சென்றால், ஊர்க்கோடியில் – பாதைக்குச் சற்று உள்ளடங்கி உள்ள கோயிலைக் காணலாம். (கிடங்கல் என்னுமிடத்தைக் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். பெயர்ப்பலகை ஏதுமில்லை. குறுகலான சாலை. ஊருள் செல்வது மண்சாலை. எனவே வேன், கார் செல்லும். பஸ் செல்வது மிகச் சிரமம்.) மேற்குறித்த சாலையில் ஆக்கூர் முக்கூட்டுக்கு முன்பாகவே உள்ள பூந்தாழை என்னுமிடத்திற்கு வந்து – ஊரைத்தாண்டி, திருக்கடவூர் 4 கி.மீ. என்று சிறிய மைல் கல் உள்ள இடத்தில் சற்றுத்தள்ளி – இடப்பக்கமாக மாமாகுடிக்குப் பிரிந்து செல்லும் பாதையில் சென்று ஊரையடையலாம். இது தார்ப்பாதை ஆனால் இதுவும் குறுகலான சாலை. பூந்தாழையிலிருந்து மாமாகுடிக்கு 2 கி.மீ. தொலைவு.

புராண முக்கியத்துவம்

பழமையான மிக சிறிய கோயில். விமானம் சிதைந்து, சுவர்கள் வெடிப்புற்று பழுதடைந்துள்ளது. மழைக்காலத்தில் நீர் உள்ளே ஒழுகும். திருப்பணிகள் செய்து காப்பாற்றப்பட்ட வேண்டிய நிலையில் கோயில் உள்ளது. நான்கு புறமும் சுற்றுச் சுவருடனும், கிழக்கில் ஒரு வாயிலுடனும் ஆலயம் இன்று காணப்படுகிறது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே நாம் காண்பது பலீபீடம். அதையடுத்து நந்தியெம்பெருமான் தனி மண்டபத்தில் உள்ளார். வெளிப் பிராகாரம் சுற்றி வரும்போது தென்மேற்கில் தல விநாயகரும், மேற்குச் சுற்றில் முருகப்பெருமானும், வடமேற்குப் பகுதியில் மகாலட்சுமியும் உள்ளனர். இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்பு தலமாகும். நடராச பெருமானின் விரிசடையில் கங்கையும், நாகமும் அமைந்திருப்பது அழகாகவுள்ளது. பெருமான் நின்றாடும் பீடத்தில் வாத்தியம் வாசிப்பது போலவும், தாளம் போடுவது போலவும் செப்பு உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மாமாகுடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top