அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், அம்பாபுரம்
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், அம்பாபுரம் , கடலூர் மாவ,சிதம்பரம் வட்டம்
இறைவன்
இறைவன்: கைலாசநாதர், இறைவி: கல்யாணசுந்தரி
அறிமுகம்
சேத்தியாதோப்பு- வடலூர் இடையில் உள்ள பின்னலூரில் இருந்து கிழக்கில் பிரியும் சாலையில் இரண்டு கிமி தூரம் சென்றால் வருவது அம்பாபுரம்,அம்பாள் புறம் என்பதே அம்பாபுரம் ஆனது ஊரின் எல்லையில் வலதுபுறம், பிள்ளைமார் தெருவின் கடைசியில் உள்ளது இந்த பாழ்பட்ட சிவன் கோயில் இக்கோயிலில் கைலாசநாதர், கல்யாணசுந்தரி சன்னதிகளும், சுப்பிரமணியர் விநாயகர் உபசன்னதியும் உள்ளன. இங்கு கோயில் குளம் ஒன்றும் உள்ளது. இருபது வருடங்களின் முன் ஆறு கால பூசை நடைபெற்ற இக்கோயில் இன்று பூட்டப்பெற்று புதர் மண்டி,கிடக்கிறது. பாம்பு கிடக்கும் போகாதிங்க பாம்பு கிடக்கும் போகாதிங்க என தெருக்காரங்க சொல்ல நான் கைலாசநாதரை காண சென்றேன். விவசாயபணிகள் வருமானமின்றி போக, பிள்ளைமார்கள் ஊரை விட்டு காலி செய்துவிட்டு போக கைலாசநாதருக்கு வந்தது சோதனை. பூஜைகள் விழாக்கள் குறைய ஆரம்பித்து, பக்தர்கள் வரவும் அர்ச்சகர் வரவும் நின்றுபோக ….. சுற்றுபட்டு ஊர்களுக்கு நேரம் சொல்ல ,ஆறுகாலம் ஆடி ஆடி ஒலித்த மணி இன்று மௌனமாய் .. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பின்னலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி