அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர்
முகவரி
அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம்
இறைவன்
இறைவன்- கைலாசநாதர், இறைவி-பார்வதி அம்மன்
அறிமுகம்
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் சிவன்கோயில் சேத்தியாதோப்பு -அகரஆலம்பாடியில் இருந்து கம்மாபுரம் சாலையில் சேரும் வழியில் சிறு வரப்பூர் உள்ளது. பழைய செங்கல் திருப்பணி கோயில் முன்னர் பெரிய சிவன்கோயிலாக இருந்து சிதைந்த பின்னர் தற்போதுள்ளபடி கோயிலின் வாயில் மேல் சுதை சிற்பம், அதில் சிவனிடம் விநாயகர் மாம்பழம் பெரும் கதை சிலையாக்கப்பட்டுள்ளது. இறைவன் கருவறை முன்னர் ஒட்டு கட்டிடம் உள்ளது. கருவறைகள் சாதாரண கொத்தனார் செய்த வேலை போல் உள்ளது. விநாயகர் முருகனுக்கு சிறு வேலைப்பாடில்லாத சிற்றாலயங்கள் உள்ளன. இறைவனது இடப்பாகம் கொண்டு தனி கோயிலில் அம்பிகை கிழக்கு நோக்கி உள்ளார். ஒரு உடைந்து போன அம்மன் சிலை ஒன்று இரண்டு துண்டுகளாக உள்ளது. கோயில் அதிகம் பராமரிப்பில்லை, வாயிலில் ஒரு சிறு வீடு உள்ளது. காவலும் பூஜையும் அவரே.. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
`
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிறுவரப்பூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருத்தாசலம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி