Monday Jan 27, 2025

அருள்மிகு கைலாசநாதர் கோயில், சேர்ந்தபூமங்கலம் (நவ கைலாசம்)

முகவரி

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், ராஜபதி, தூத்துக்குடி மாவட்டம் +91- 99420 62825, 98422 63681

இறைவன்

இறைவன்: கைலாசநாதர் இறைவி: அழகிய பொன்னம்மன்

அறிமுகம்

இக்கோயில் 1000 வருடங்கள் தொன்மையானது. இதனை குலசேகரப் பாண்டியன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். இக்கோயில் இரண்டு வாசல்களுடன் அமைந்திருக்கிறது.கன்னி விநாயகர், சந்திரன், சூரியன், சொக்கநாதர், மீனாட்சியம்மன், சனீஸ்னீ வரர், பைரவர் சன்னதிகள் உள்ளன. இங்குள்ள முருகனை வலதுபுறம் திரும்பிய மயில் வாகனத்துடன் காணலாம். இக்கோயிலை பாண்டியன் குலசேகரன் அல்லது முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆகியோர் கட்டியிருக்கலாம் என்பதற்கு சாட்சியாக மதுரை சொக்கநாதருக்கும், மீனாட்சி அம்மைக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

புராண முக்கியத்துவம்

சேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தமங்கலத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் நவக்கைலாயங்களுள் ஒன்றாகவும், நவக்கிரகங்களில் சுக்ரனுக்கு உரிய தலமாகவும் இருக்கிறது. மூலவர் கைலாசநாதர் சுக்கிர அம்சமானவர். அம்பாள் அழகிய பொன்னமை என்ற பெயரில் இருக்கிறார். இவரை சௌந்தர நாயகி என்றும் அழைக்கின்றனர். அம்மன் தெற்கு நோக்கி உள்ளார். கருவறை விமானத்தில் குபேரன் இரு மனைவியரோடு யானை மீது இருக்கிறார். கன்னி விநாயகர், சந்திரன், சூரியர், மீனாட்சி, சொக்கநாதர், சனீசுவரர், பைரவர் சந்நிதிகளும், முருப்பெருமான் சன்னதியில் வலப்புறம் திரும்பிய மயில் வாகனத்துடன் இருக்கிறார். அகத்திய முனிவரின் சீடர்களில் முக்கியமானவரான உரோமச முனிவர் தன் குருவான அகத்தியரின் உதவியுடன் சிவபெருமானை நேரில் தரிசித்து, அதன் மூலம் முக்தி அடைய வேண்டும் என்று விரும்பி தனது குருவிடம் அதற்கான வழிமுறைகளைக் கேட்டதாகவும். அதற்கு அகத்திய முனிவரும் தாமிரபரணி ஆற்றில் 9 தாமரை மலர்களை மிதக்க விட்டு அவை ஒவ்வொன்றாக கரை ஒதுங்கும் இடங்களில் சங்கு மூலம் நீராடி நவக்கிரகங்களின் வரிசையில் சிவபெருமானை வழிபட்டால் சிவபெருமானின் காட்சி கிடைக்கும் என்றும் அதன் மூலம் முக்தி அடையலாம் என்று சொல்லி 9 தாமரை மலர்களை தாமிரபரணி ஆற்றில் மிதக்க விட்டதாகவும் அந்த மலர்களை தொடர்ந்து சென்ற உரோமச முனிவரும் தனது குரு கூறியபடி வழிபட்டு முக்தி அடைந்தார்.

நம்பிக்கைகள்

செல்வம் பெருக இங்குள்ள குபேரரை வழிபட்டுச் செல்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

தேவியருடன் குபேரன்: கருவறையின் மேலுள்ள விமானத்தில் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனின் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு தேவியர் அவருடன் இருக்கின்றனர். தேவியருடன் யானை மீது அமர்ந்திருக்கும் குபேரனை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும். கருவறையில் கைலாசநாதர், சுக்கிர அம்சத்துடன் காட்சி தருகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மையின் பெயரிலேயே பொன் இருக்கிறது. இவள் தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். விமானத்திலுள்ள குபேரரை வணங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஜாதகத்தில், சுக்கிரன் அனுகூலமாக இல்லாதவர்கள், நவக்கிரக மண்டபத்திலுள்ள சுக்கிரனுக்கு வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சைப்பொடி சாதம், தயிர்ச்சாதம் நைவேத்யம் படைத்து, வெண்தாமரை மலர் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரை நேரத்தில் (காலை 6-7) இவரை வழிபடுவது விசேஷம். தீர்த்த சிறப்பு: தாமிரபரணி இத்தலத்தின் தீர்த்தம். நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசத்தில், பொதிகை மலையில் உற்பத்தியாகும் தாமிரபரணி, இவ்வூர் அருகிலுள்ள புன்னக்காயல் கடலில் சங்கமிக்கிறது. தை மற்றும் ஆடி அமாவாசையில் சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கிறது.

திருவிழாக்கள்

பிரதோஷம், சிவராத்திரி, தை ஆடி அமாவாச

காலம்

2000-3000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ராஜபதி

அருகிலுள்ள இரயில் நிலையம்

தூத்துக்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருநெல்வேலி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top