அருள்மிகு காளகநாதர் திருக்கோயில், பட்டடகல்
முகவரி
அருள்மிகு காளகநாதர் திருக்கோயில், பட்டடகல் நினைவுச்சின்னங்களின் குழு, பாகல்கோட் மாவட்டம், கர்நாடகா – 587201
இறைவன்
இறைவன்: காளகநாதர்
அறிமுகம்
இந்தியாவின் கர்நாடகாவின் பாகல்கோட் மாவட்டத்தில் பட்டடக்கலில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து ஆலயம் கலகநாத கோயில். இந்த கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான பட்டடக்கல் குழுவில் நினைவுச்சின்னத்தின் ஒரு பகுதியாகும். காளகநாதர் தொகுதி கோயில்கள் மலப்பிரபா ஆற்றங்கரையில் ஹூச்சியப்பக் கோயில் தொகுதிக்குத் தென்புறத்தில் அமைந்துள்ளது. 38 கோயில்களைக் கொண்டுள்ள இத்தொகுதியின் முதன்மைக்கோயில் காளகநாதர் (சிவன்) கோயிலாகும். இக்கோயிலின் கோபுரம் வளைகோட்டமைப்பில் கட்டப்பட்டுள்ளது. நுழைவு வாயிலில் கங்கை மற்றும் யமுனையின் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயிலின் காலம் கிபி எட்டாம் நூற்றாண்டு என அறியப்பட்டுள்ளது. கூடம், உள்நடை மற்றும் கருவறை கொண்டுள்ள காளகநாதர் கோயில் தவிர இத்தொகுதியின் பெரும்பாலான பிற கோயில்கள் சிதிலமடைந்துள்ளன. திரிகூடாச்சல அமைப்பில் (மூன்று அறைகள்) உள்ள பத்தாம் நூற்றாண்டுக் கோயில் ஒன்றும் இத்தொகுதியில் உள்ளது.
காலம்
7 – 8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
UNESCO
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பதாமி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பதாமி
அருகிலுள்ள விமான நிலையம்
பெல்கம்