Friday Jun 28, 2024

அருள்மிகு கள்ள வாரண பிள்ளையார் கோயில் , திருக்கடையூர்

முகவரி

அருள்மிகு கள்ள வாரண பிள்ளையார் கோயில் , திருக்கடையூர்(ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் )திருக்கடையூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், தமிழ்நாடு- 609311

இறைவன்

கள்ள வாரண பிள்ளையார்

அறிமுகம்

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் “கள்ள வாரண பிள்ளையார்’ அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் “சோர கணபதி’ என்பார்கள். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு அனைவருக்கும் கொடுத்தார். பொதுவாக, விநாயகர் பூஜைக்குப் பின்னரே இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும். இதனால் விநாயகப் பெருமான் அந்த அமிர்த குடத்தை எடுத்து இத்தலத்தில் ஒளித்து வைத்தார். எனவே இத்தலத்து விநாயகர் “கள்ள வாரண பிள்ளையார்’ எனப்படுகிறார். அந்த குடம் லிங்கமாக மாறி “அமிர்தகடேஸ்வரர்’ ஆனது. இதனால் தான் ஆயுள்விருத்தி தொடர்பான யாகங்கள், அமிர்தத்தை மறைத்து வைத்த காரணத்தால் இந்த விநாயகரை கள்ள வாரண விநாயகர் என்றழைத்தனர். தேவார பாடல் பெற்ற காவேரி தென்கரை தலங்களில் 47 வது தலமாகும் .தேவார சிவத்தலங்கள் 276 இல் 110 வது தலமாகும் . 51 சக்தி பீடங்களில் இது கால சக்தி பீடமாகும் .அஷ்ட வீரட்டானத்தில் ஒன்றாகும் (எமனை சம்ஹாரித்தது) .

புராண முக்கியத்துவம்

தருமபுரம் ஆதீனத்துக்கு கீழ் செய்யல்படும் கோயில்.அருணகிரிநாதர் இத்தல முருகனை பற்றி தன் திருப்புகழில் பாடியுள்ளார் . இங்கு முருக பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதி தேவியின் வலப்பக்கம் தாயை தழுவியவாறு காட்சி தருகிறார். அமிர்தம் எடுக்க பாற்கடலை கடைந்த போதும், பிறகு அதை உண்ண தேவர்கள் முடிவு செய்த போதும் விநாயகரை முதலில் நினைக்கவும் வழிபடவும் தேவர்கள் மறந்து விட்டனர். இதனால் கோபம் கொண்டிருந்த விநாயகர் அமிர்த கலசத்தை எடுத்து மறைத்து வைத்துக் கொண்டது தெரிந்தது. இங்கு எழுந்தருளும் பிள்ளையாருக்கு ‘கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க நீண்ட ஆயுள் கிடைக்கும். சிவபெருமான் மார்க்கண்டேயனுக்காக காலனையே காலால் உதைத்த திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருத்தலத்தில் உள்ளது வாரணப் பிள்ளையார் ஆலயம். இவர் பக்தர்களின் உள்ளத்தைக் கவர்வதால் கள்ள வாரணப் பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அளிக்கவல்லவர். இது மூன்றாவது படைவீடாகும். இக்கோயிலுக்கு சோழர்,பாண்டியர் மற்றும் விஜயநகர மன்னர்கள் திருப்பணி செய்துள்ளார்கள் .சிலப்பதிகாரத்தில் வரும் ‘மாதவி ‘ யின் இல்லம் இத் திருக்கூடலூரில் தேரோடும் வீதியில் உள்ளது .தற்போது இவ்வீடு பாழடைந்துவிட்டது . திருக்கடவூரில் விநாயகர் கள்ள வாரண விநாயகர் என்ற பெயரில் அருள்புரிகிறார். ஒருமுறை விநாயகரை இந்திராதி தேவர்கள் வணங்க மறந்தனர். இதனால் அமிர்த கலசத்தை அவர் மறைத்து வைத்தார். அமிர்தம் கிடைக்காத தேவர்கள் விநாயகரை மறந்ததால் வந்த வினை இது என்பதனைப் புரிந்து விநாயகரை வணங்கி மீண்டும் அமிர்தத்தைப் பெற்றனர். இந்நிகழ்ச்சி நடந்த இடம் அபிராமி, அமிர்தக்கடேஸ்வரர் அருள்புரியும் திருக்கடவூர் ஆகும். “இவர் கள்ள விநாயகர். அமுதக் குடத்தை மறைத்து வைத்துபோல் அந்தாதியை மறைந்து விட்டால் என்ன செய்வது? அபிராமியைத் தொழுது அருள்பெற்ற அபிராமி பட்டர் இந்த விநாயகரை வணங்கிப் பாடிய திருக்கடவூர் கள்ள விநாயகர் பதிகம் இவரது சிறப்பினைக் கூறும். அமிர்தத்தை மறைத்ததால் இவர் கள்ள வாரண விநாயகரானார். அபிராமிப் பட்டர் அபிராமி அந்தாதியில் காப்புச் செய்யுளில் இவரைப் போற்றி வணங்குகிறார். ஈசனின் சந்நிதிக்கு வலதுபுறத்தில் நந்திக்கு அருகேயுள்ள வெளிப்பிரகாரத்தில் கையில் அமுத கலசத்தை ஏந்தியபடி அருள்புரிறார். இவரை வழிபட நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தித்தை வழங்கி சுக வாழ்வினைத் தருவார்.

சிறப்பு அம்சங்கள்

கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரத்தில் 1008 சங்குகளால் அபிஷேகம் நடைபெறுவது சிறப்புடையது .சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் கால சம்ஹார பெருவிழாவும் ,சித்திரை பௌர்ணமியில் தீர்த்த வைபவமும் இத் தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது .

திருவிழாக்கள்

மாசி மகம், பிரதோஷம், விநாயகர் சதுர்த்தி

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருக்கடையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top