அருள்மிகு இராவண பாடி குகை
முகவரி
அருள்மிகு இராவண பாடி குகை, அய்கொளெ, பாகல்கோட், கர்நாடகம் – 587124
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
இராவண பாடி குகை, அய்கொளெயில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரைக் கோயிலாகும். இக்கோயில் ஹூச்சமல்லி கோயிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் ஒரு செவ்வக வடிவக் கருவறையும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் இலிங்கம் காணப்படுகிறது. இது பாதாமி குடைவரைக் கோயில்களைவிடப் பெரிய கருவறை கொண்ட சைவக் குடைவரைக் கோயில். மூன்று வாயில்களும் சிற்ப வேலைப்பாடுடைய தூண்களும் கொண்ட நடைப்பகுதி ஒன்று கருவறையின் முன் உள்ளது. ஆனால் இது உடைந்த நிலையில் காணப்படுகிறது. கோயில் சுவர்களில் நடனமாடும் சிவன் உள்ளிட்ட பல பெரியளவு உருவங்கள் காணப்படுகின்றன. அய்கொளெயில் உள்ள மூன்று குடைவரைக் கோயில்களில் சிவனுக்குரிய இக்கோயிலே மிகவும் அறியப்பட்டதாக உள்ளது.
புராண முக்கியத்துவம்
இந்த குடவரை கோவிலின் அருகில் தான் முதல் முறையாக பரிசோதனை செய்த குடவரை கோவிலும் உள்ளது. இராவண பாடி குகை, அய்கொளெயில் அமைந்துள்ள மிகப்பழமையான குடைவரைக் கோவிலாகும். கிபி 550க்கு முன் கட்டப்பட்டதாக அறியமுடிகிறது. இக்கோவில் ஹூச்சமல்லி கோவிலுக்கு தென்கிழக்கில் அமைந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோவிலில் ஒரு செவ்வக வடிவக் கருவறையும் இரு மண்டபங்களும் உள்ளன. கருவறையில் இலிங்கம் காணப்படுகிறது. இது பாதாமி குடைவரைக் கோவில்களைவிடப் பெரிய கருவறை கொண்ட சைவக் குடைவரைக் கோவில். மூன்று வாயில்களும் சிற்ப வேலைப்பாடுடைய தூண்களும் கொண்ட நடைப்பகுதி ஒன்று கருவறையின் முன் உள்ளது. குடவரையின் இடது புறத்தில் அரத்தநாரியும் மறுபுறம் மகிஷாசுராவும், விஷ்ணுவை வராக அவதாரத்திலும் காண முடிகிறது. கோவில் சுவர்களில் நடனமாடும் சிவன் உள்ளிட்ட பல பெரியளவு உருவங்கள் காணப்படுகின்றன.மண்டபத்தினுள் நடராஜர் ரூபத்தில் சிவனும்,அவரின் அருகில் விநாயகர், பார்வதி மற்றும் சப்தமாதர்களை காண முடிகிறது. அய்கொளெயில் உள்ள மூன்று குடைவரைக் கோவில்களில் சிவனுக்குரிய இக்கோவிலே மிகவும் அறியப்பட்டதாக உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
அய்கொளெயில் உள்ள மூன்று குடைவரைக் கோவில்களில் சிவனுக்குரிய இக்கோவிலே மிகவும் அறியப்பட்டதாக உள்ளது.
காலம்
7 to 8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அய்கொளெ
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாகல்கோட்
அருகிலுள்ள விமான நிலையம்
பெல்காம்