அருள்மிகு ஆலங்காடு சிவன்கோயில், ஆலங்காடு
முகவரி
அருள்மிகு ஆலங்காடு சிவன்கோயில், ஆலங்காடு, மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம், தமிழ்நாடு609104
இறைவன்
இறைவன்: ஆலங்காட்டீஸ்வரர், இறைவி: பாலாம்பிகை
அறிமுகம்
சீர்காழிக்கு வடகிழக்கில் 7கிமி ல் உள்ள பச்சைபெருமாள்நல்லூர் அருகில் தான் இந்த ஆலங்காடு உள்ளது. புத்தூர் – மாதானம் வந்து அதன் தெற்கில் மூணு கிமி வந்தால் ஆலங்காடு தான். பெரியதொரு குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார் நம் ஈசன். இறைவி தெற்கு பார்த்த சன்னதி கொண்டுள்ளார். விநாயகர், முருகன், உபசன்னதிகளும் இருந்தன தற்போது இடிந்துபோன முகப்பு மண்டபத்தில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை பைரவர், சூரியன் சண்டேசர் நாகர் ஆகியோர் கிடத்தப்பட்டுள்ளனர். திருக்கோயிலின் முகப்பில் சிறு மாடம் போன்ற விநாகயர் சன்னதியும் முருகன் சன்னதியும் சாய்ந்து நிற்கின்றன. கோயிலின் பின்புறமும் ஒரு சிறு குட்டை உள்ளது. கோயில் பராமரிப்பின்றி பெரும்பகுதி பழுதடைந்துவிட்டது. எங்கும் மரம் செடி கொடிகள் என இந்த மழைக்கு முளைத்து நிற்கின்றன. காரணம்? வழக்கமான பதில் தான் கோயிலில் சிவவழிபாடு செய்யும் சிறுபான்மை மக்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட கோயில் HR&CEயின் எடுப்பார் கைப்பிள்ளையாகி இன்று பராமரிப்பார் இல்லா சவலைபிள்ளையாகி நிற்கிறது கோயில். ஒருகால பூஜைக்கு மட்டும் அர்ச்சகர் வருவதாக தெரிகிறது. நாம் சென்றிருந்த போது ஊர் மக்கள் நூறுநாள் பணியாக இக்கோயிலை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஏதோ அவர்களால் முடிந்த சிவத்தொண்டு. அவ்வளவு தான். கோயிலுக்கு நிலமுண்டு ஆனால் கொடுக்கமாட்டேங்கிறாங்க, திருப்பணிகள் பண்ணும் அளவுக்கு எங்க கிட்ட ஏதுங்க காசு? அதான் ஆபீஸ்-ல சொல்லியிருக்கோம் என்கின்றனர். நீர் விடுத்து பால் குடிக்கும் அண்ணன்களாயிற்றே அவர்கள்!! நீரில்லா நெற்றி மட்டும் பாழ் இல்லை, சிவனில்லா ஊரும் பாழ் தான். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
புராண முக்கியத்துவம்
ஆலங்காடு தமிழகத்தில் பல இடங்களில் ஆலங்காடு எனும் பெயர் கொண்ட தலங்கள் உள்ளன, ஊரின் மரங்களை வைத்து ஆகுபெயரானதால் ஆலங்காடு எனப்பட்டது. இறைவன் பெயர் ஆலங்காட்டீஸ்வரர் என்பதாக இருந்தது. ஆனால் இ.ச.அ.துறை படி இக்கோயில் இறைவன் அகஸ்தீஸ்வரர், பாலாம்பிகை என்றே உள்ளது. சு.கோதண்டராமன் அவர்களின் காரைக்கால் அம்மையார் ஆய்வு கட்டுரையில் அவ்வம்மை தரிசித்த ஏழு ஆலங்காடுகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம் என கூறுகிறார்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஆலங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி