அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நத்தம்
முகவரி
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நத்தம் – கொரநாட்டுக் கருப்பூர் – அஞ்சல் – 612 501, கும்பகோணம் (வழி) – வட்டம், தஞ்சை மாவட்டம்.
இறைவன்
இறைவன்: அகத்துஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்
இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். கொரநாட்டுக் கருப்பூர் என்று வழங்குகிறது. கும்பகோணம் சென்னை பேருந்துச் சாலையில் கும்பகோணத்தையடுத்துக் கருப்பூர் உள்ளது. கருப்பூரை அடுத்து 2 கி.மீல் உள்ள ‘நத்தம்’ பகுதியில் ஒரு கோயில் உள்ளது. திறந்த நிலையில்தான் சிவலிங்க மூர்த்தம் மட்டுமே உள்ளது. சுவாமி – அகத்தீஸ்வரர். அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத் திருமேனி இன்றில்லை. இக்கோயிலே வைப்புத் தலமாகச் சொல்லப்படுவது. இங்குக் குடியிருக்கம் மக்கள் இச் சிவலிங்க மூர்த்தத்திற்குத் தீபமேற்றி வழிபாடு செய்து வருகின்றனர். நன்கு பராமரித்து வருகின்றனர். ஏழை மக்களாயினும் தெய்வ மனம் படைத்தவர்கள்.
புராண முக்கியத்துவம்
கருப்பூரில் ஸ்ரீசுந்தரேஸ்வரர் கோயில் உள்ளது. பெரிய கோயில். இங்குள்ள பெட்டிக்காளியம்மன் பிரசித்தி பெற்றது. பெட்டிக்கள் இருக்கும் இந்த காளியம்மனுக்குப் படையலிடும் போதுதான் பெட்டி திறக்கப்படுகிறது. மற்றக் காலங்களில் பூட்டியே இருக்கும். அப்படியே தீபாராதனை அர்ச்சனை நடைபெறுகிறது. கருப்பூர் செல்வோர் இக்கோயிலையும் தரிசித்து வரலாம். ஆனால் நந்தத்தில் உள்ள இடிந்த கோயிலே – ஸ்ரீ அகத்தீசுவரரே வைப்புத்தலமாகும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி