அக்கரைகுளம் சொக்கநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
அக்கரைகுளம் சொக்கநாதர் சிவன்கோயில்,
அக்கரைகுளம், நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்
இறைவன்:
சொக்கநாதர்
இறைவி:
சொக்கநாதர்
அறிமுகம்:
இக்கோயில் காலத்தால் பிந்தையது எனினும் நாகை பன்னிரு கோயில்களில் ஒன்றான கார்முகேசம் கோயில் சிதைவடைந்ததால் அந்த இடத்தில் இந்த அக்கரை குளம் சொக்கநாதர் கோயில் வந்துள்ளது. போர்த்துகீசியர் தங்கள் வசதிக்காக அக்கோயில் லிங்கத்தை எடுத்துவிட்டு கோயிலை பாசறையாக உபயோகப்படுத்தினர். அந்த கார்முகேஸ்வரர் லிங்கம் பெரிய கோயிலின் பிரகாரத்தில் ஒரு சன்னதியாக உள்ளது. இது உப்பனாற்றின் கரையில் பெரிய குளத்தின் கரையில் உள்ள திருக்கோயில். கிழக்கு நோக்கியது கோபுரம் இல்லை.
இறைவன் சொக்கநாதர் கிழக்கு நோக்கியபடி சிறிய லிங்கமூர்த்தியாக உள்ளார். அவரின் முன்னர் அழகிய சிறிய நந்தி உள்ளது இறைவி மீனாட்சி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். இறைவன் கருவறை பிரஸ்தரம் எனும் மட்டம் வரை கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. கருவறை கோட்டத்தில் தென்முகன் உள்ளார். பிரகாரத்தில் விநாயகர் முருகன் மகாலட்சுமி ஆகியோர் தனி தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். காலை மாலை என இருவேளை பூஜைகள் நடைபெறுகின்றன.யாருமில்லா உச்சிகால வேளையிலும் அர்ச்சகர் பூஜைகளை ஆத்மார்த்தமாக செய்துகொண்டிருந்ததை காணமுடிந்தது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அக்கரைகுளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி